CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!

CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
News Image

தமிழ்நாட்டில் 2027ம் ஆண்டு முதல் கடுமையான சாலை விதிகளை மக்கள் பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, சாலை பாதுகாப்புக்கான செலவை இதுவரை நாம் செய்தது கிடையாது. செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் கோயம்புத்தூர் எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் செல்லும்போது சீட் பெல்ட் போடுகிறார். வண்டியின் வேகமும் குறைந்து 80 முதல் 90 வரை மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு 50 மீட்டரிலும் கண்காணிப்பு கேமரா இருக்கிறது. அதிகமாக ஸ்பீடு சென்றால் ஒவ்வொரு கேமரா மூலமும் நமக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அது லாரி, பஸ், இரு சக்கர வாகனம் எதுவாக இருந்தாலும் உடனடியாக அபராதம் விதிக்கப்படுகிறது. ஓட்டுநருக்கான விழிப்புணர்வை கடுமையான சட்டங்கள் மூலமாக கேரள அரசு கொடுத்திருக்கிறது.

ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் அதிப்பட்சமாக 140 முதல் 160 கிலோமீட்டர் வரை வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். இங்கிருக்கும் நிறைய பேர் சென்றிருப்போம். தேசிய நெடுஞ்சாலையில் 100 கி.மீ., மேல் வேகமாக செல்லக்கூடாது. மாநில நெடுஞ்சாலையில் 80 கி.மீ.,க்கு மேல் வேகமாக செல்லக்கூடாது. இந்த சட்டத்தை முதலமைச்சர் விஜய் கடுமையாக அமல்படுத்த சொல்லியிருக்கிறார். இன்று முதல் 6 மாதங்கள் கால அவகாசம் கொடுக்க சொல்லியிருக்கிறார். 2027ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் கேரளாவைப் போல கிட்டதட்ட 70 ஆயிரம் கி.மீ., தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் கேமராக்கள் பொருத்தப்படும்.

சாலைகளில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்பவர்கள் என விபத்தில் நிறைய பேர் இறந்துள்ளனர். இனியும் ஒரு உயிர் கூட போகக்கூடாது. வரக்கூடிய காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.கேரளாவில் இந்த விதியால் இறப்பு விகிதம் 5 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. சாலைகளை புதிதாக உருவாக்குவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அதிவேகம், மது அருந்துதல், சாலை விதிகளை மதிக்காமல் இருத்தல் போன்றவை நடைபெறுகிறது. அதனால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து சாலைகளிலும் ஏஐ கேமரா மூலம் கண்காணித்து அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் விழிப்புணர்வை கொண்டு வர முடியும் என கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் பிஞ்சு குழந்தைகள் தொடங்கி அந்த பக்கமாக நடந்து செல்லும் பாதசாரிகள் வரை உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் மாறுவதில்லை என்ற நிலையில் அபராத தொகை உள்ளிட்ட சில நடவடிக்கைகளால் மாற வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks