CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?

CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
News Image

CM Vijay Cabinet: மத்திய அரசுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அமைச்சர்களை கட்டுப்படுத்துமாறு டெல்லி தரப்பு பனையூருக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளதாம்.

முதலமைச்சர் விஜயின் அமைச்சரவை:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அனைவருமே புதியவர்கள். இதுபோக, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியை சேர்ந்த 4 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களது செயல்பாட்டை ஏற்கனவே மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறதாம். அதில் இரண்டு பேரின் நடவடிக்கைகள் விஜய்க்கே எதிர்காலத்தில் தலைவலியாக மாறக்கூடும் என டெல்லி தரப்பு எச்சரித்துள்ளதாம். ஒருவர் வசூலில் ஈடுபட தொடங்கியுள்ள நிலையில், மற்றொருவர் பாஜகவின் முதல் இரண்டு தலைமைகளையும் வெளிப்படையாகவும் கடுமையாகவும் விமர்சிப்பதை டெல்லி சுத்தமாக விரும்பவில்லையாம். எனவே, இருவரையும் கட்டுப்படுத்துமாறு பனையூருக்கு ஆலோசனைகள் பறந்துள்ளனவாம்.

கல்லா கட்டும் கதர் அமைச்சர்..!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த அமைச்சர் பதவியேற்றது முதலே, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் வலுவாக கல்லா கட்டவும் தொடங்கியுள்ளாராம். வெளிப்படையான புகார்கள் எழுந்தாலும், தங்களது ஆதரவின்றி ஆட்சி தொடர முடியாது என கூறி ஸ்வீட் பாக்ஸ்களை அள்ளிப்போட்டு வருகிறாராம். இதுதொடர்பாக அண்மையில் பனையூர் தலைமையை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர், பெரும் ஊழல் பேர்வழியான அந்த கதர் சட்டை அமைச்சரிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என வலியுறுத்தியுள்ளாராம். ஏற்கனவே இவர்களை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என கூறியதையும் மீறி, அதிகாரத்திலும் பங்களித்துள்ளீர்கள். இதை எல்லாம் சற்று கவனித்துக் கொள்ளுங்கள் என ஆலோசனையும் வழங்கியுள்ளனராம்.

டெல்லியை கடுப்பேற்றும் அமைச்சர்..!

வராது வந்த மாமனியாய் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மற்றொரு கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர், தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவை மோசமாக்கும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார். மத்திய அரசையும், பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷாவையும் கடுமையாக விமர்சிப்பதை டெல்லி சற்றும் விரும்பவில்லையாம். அதோடு, சமூகம் சார்ந்த அந்த அமைச்சரின் பேச்சுகள் பிரிவினையை ஆதரிப்பதாக உள்ளதாக உளவுத்துறையும் அறிக்கை அனுப்பியுள்ளதாம். தமிழக அரசுக்கு நிதி விவகாரத்தில் உதவ தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். அப்படி இருக்கையில் இந்த அமைச்சரின் எதிர்மறையான பேச்சை பாஜக சற்றும் விரும்பவில்லையாம்.

இதையும் படியுங்கள்: TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை

அமைச்சரவயில் விரைவில் மாற்றம்:

அனுபவமில்லாத அமைச்சரவை அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதனை நெறிப்படுத்த முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். அதேநேரம், செயல்பாடுகளின் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் அரசு தயாராகி வருகிறதாம். இந்நிலையில் தான், மத்திய அரசிடம் இருந்து சில புகார்கள் தலைமை செயலகத்திற்கே வந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட கதர் சட்டை அமைச்சரின் பதவி பறிப்பு என்பது ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். மற்றொரு கூட்டணி அமைச்சருக்கு இலாகாவை மாற்றுவதோடு, மத்திய அரசு மீதான அவரது விமர்சனங்களின் சூட்டை குறைக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றனவாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks