ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
News Image

இன்றைய காலகட்டத்தில் எங்கு சென்றாலும் சரி ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது. வங்கி கணக்கு திறப்பது முதல் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது வரை அனைத்திற்கும் முக்கியமான ஆவணமாக ஆதார் அடையாள அட்டை கேட்கப்படுகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அதை எப்போதும் நம்முடனே எடுத்துச் செல்வதில்லை. ஏனெனில் தவறுதலாக தொலைத்துவிடுவோம் என்ற பயமும் இதற்கொரு காரணம்.

இப்படிப்பட்ட சூழலில் ஆதார் அட்டை தேவைப்படும்போது வீட்டிற்கு அழைத்து ஆதார் கார்டை அனுப்ப சொல்லலாம். ஆனால் இனி சிரமப்படத் தேவையில்லை. அரசு "MyGov Helpdesk" எனும் சேவையின் மூலமாக வாட்ஸப்பில் டிஜிலாக்கர் வசதியை வழங்குகிறது. நீங்கள் உங்களுடைய முக்கியமான ஆவணங்களை டிஜிலாக்கர் அக்கவுண்டில் சேமித்து வைத்திருந்தால் ஒரு சில நிமிடங்களில் ஆதார் கார்டை டவுன்லோட் செய்ய முடியும்.

முதலில் 9013151515 என்ற நம்பரை உங்களுடைய மொபைலில் சேமிக்க வேண்டும். சேமித்த நம்பரை எளிதில் தெரிந்து கொள்ள "MyGov Helpdesk" அல்லது "ஆதார்" என எப்படி வேண்டுமானாலும் உங்கள் மொபைலில் சேமிக்கலாம். அதன் பிறகு அந்த நம்பரை திறந்து "ஹாய்" அல்லது "நமஸ்தே" என்று மெசேஜ் அனுப்பலாம். அதில் பல ஆப்ஷன்களுடன் பதில் வரும். "டிஜிலாக்கர் சர்வீசஸ்" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் தான் உண்மையிலேயே உங்கள் அக்கவுண்ட்டை பார்க்கிறீர்களா? என்பதற்காக டிஜிலாக்கர் அக்கவுண்டின் விவரங்கள் கேட்கப்படும்.

அதற்கேற்ப உங்கள் விவரங்களை வழங்குங்கள். அப்போது உங்களுடைய ஆதார் நம்பரையும் வழங்க வேண்டும். ஆதார் நம்பரை வழங்கியவுடன் உங்களுடைய ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். OTP சரிபார்ப்பு செயல்முறையை முடிப்பதற்கு அந்த OTP-ஐ வாட்ஸப் சாட்டில் என்டர் செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய டிஜிலாக்கர் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அந்தப் பட்டியலில் உங்களுடைய ஆதார் கார்டு சேமிக்கப்பட்டிருந்தால் அதை தேர்ந்தெடுக்கவும்.

உடனே உங்களுடைய ஆதார் கார்டு ஒரு pdf ஃபார்மெட்டில் உங்களுக்கு அனுப்பப்படும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நம்பர் மூலமாக ஆதார் கார்டை டவுன்லோட் செய்ய நினைப்பவர்கள். ஏற்கனவே டிஜிலாக்கர் கணக்கில் உங்களுடைய ஆதாரை சேமித்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.முதலில் உங்களுடைய மொபைல் நம்பர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறகு டிஜிலாக்கர் அக்கவுண்ட்டில் உங்களுடைய முக்கியமான ஆவணங்கள் எல்லாம் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நீங்கள் ஆதார் கார்டு வாட்ஸ் அப்பில் பார்க்கும்போது இல்லை என்றால் முதலில் டிஜிலாக்கர் இணையதளம் அல்லது டிஜிலாக்கர் ஆப் மூலம் அப்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு வாட்ஸ்அப் மூலமாக ஆதாரைப் பெற முடியும். இனி எங்காவது முக்கியமான இடத்திற்கு செல்லும்போது ஆதார் கார்டை வீட்டில் வைத்துவிட்டால் பதற்றம் அடைய தேவையில்லை. இந்த ஆப்ஷனை பயன்படுத்தியும் நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.

ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது. வாட்ஸ்அப் இன்னும் எளிதாக இருக்கும். ஆனால் வாட்ஸப் மூலமாக நீங்கள் சரியான நம்பரை தான் சேமித்திருக்கிறீர்களா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல டிஜிலாக்களில் உங்களுடைய ஆவணங்களை பதிவேற்றும் போது அது அதிகாரபூர்வ இணையதளமா? என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். எந்த ஒரு சேவையாக இருந்தாலும் அதற்கு UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துவது மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks