மகாராஷ்ட்ராவில் கல்வி அமைச்சர் ஆய்வுக்கு வந்த பள்ளியில் வெளியில் இருந்து மாணவர்கள் வரவழைக்கப்பட்டதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வித்துறை முறைகேடுகளை தட்டிக்கேட்கும் CJP

நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்ததில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பங்கு அளப்பறியது. நாடு முழுவதும் அந்த கட்சிக்காக தன்னார்வலாக திரண்ட இளைஞர் கூட்டத்தைக் கண்டு மத்திய, மாநில அரசுகள் மிரண்டன. இப்படியான நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே அடுத்ததாக ஒரு குற்றச்சாட்டை மகாராஷ்டிர கல்வி அமைச்சர் தாதா பூசே மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குற்றச்சாட்டு என்ன?

அபிஜித் தீப்கே வைத்துள்ள குற்றச்சாட்டின்படி,இந்த சம்பவம் லாத்தூர் மாவட்டத்தின் அவுசா பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளியில் தான் நடைபெற்றுள்ளது. மும்பையிலிருந்து 500 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் உள்ள அந்த பள்ளிக்கு நான் சென்றபோது அதிர்ச்சியான காட்சிகளை கண்டேன். பள்ளியில் குடிநீர் வசதி இல்லை என்றும், அமைச்சர் அங்கு வருவதற்குச் சற்று முன்புதான் அதன் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள் மற்ற பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. அமைச்சர் வருகிறார் என சொல்லப்பட்டப்பின் தான் மதிய உணவுக்காக புதிய தட்டுகள் வாங்கி வரப்பட்டது என தெரிவித்தார்.

In Latur’s Ausa Taluka, a govt school had brought in children from outside to present them before the media as its own students.

Why the administration is resorting to fraud instead of actually improving the schools? pic.twitter.com/F7hJJcj3Wp

— Abhijeet Dipke (@abhijeet_dipke) August 20, 2026

அபிஜித் தீப்கே அந்த பள்ளிக்கு சென்றப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களும் வெளியாகியுள்ளது. ஆனால் அவரின் குற்றச்சாட்டுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் முதல்வர் பாலாஜி கவாலி, மராத்தி வழிப் பள்ளி ஒன்று மற்றும் உருது வழிப் பள்ளி ஒன்று என இரண்டு தனித்தனிப் பள்ளிகள் ஒரே கட்டிடத்தில் இயங்குகிறது. வெளியிலிருந்து எந்த மாணவர்களும் அழைத்து வரப்படவில்லை. அங்கு இருந்த குழந்தைகள் உண்மையில் பள்ளியின் மாணவர்கள்தான். பள்ளிக்கு வழங்கப்பட்ட பழைய தட்டுகளில்தான் குழந்தைகள் சாப்பிட்டனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அபிஜித், “ஒரு அமைச்சரின் நாய்க்குக்கூட மாணவர்களை விட சிறந்த வசதிகள் கிடைக்கின்றன. பத்து ஆண்டுகளில் ஒழுகும் கூரைகளைச் சரிசெய்யவோ அல்லது இருக்கைகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவோ அரசால் முடியவில்லை. மாணவர்களை விலங்குகளை விட மோசமாக நடத்துகிறார்கள். இந்த அரசியல்வாதிகள் இத்தனை ஆண்டுகளில் உண்மையில் என்னதான் சாதித்தார்கள் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article