புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும்போது எளிதாக கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறலாம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட்டுகள் கிடைப்பதில் சிரமம்

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து சாதமான ரயில்களை நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாசஞ்சர் ரயில் முதல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வரை இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா, முன்பதிவு முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு முறையில் டிக்கெட்டுகள் பெறுவது என்பது கடும் சிரமமாக உள்ளது. ரயில்வே துறையைப் பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

இதனால் பல நேரங்களில் ரயில்களில் டிக்கெட்டுகள் கிடைக்காத சூழல் உள்ளது. இதில் எமர்ஜென்ஸி கோட்டா எனப்படும் பிரிவு உள்ளது. அதாவது அவசர கால பயணங்களை மேற்கொள்பவர்கள் அதற்கான ஆவணங்களுடன் ரயில் நிலையங்களை அணுகினால் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையுடன் கூடிய டிக்கெட்டுகள் கிடைக்கும். இதனை பல தரப்பட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

<iframe title="Vanni Arasu interview | ”பாஜக தயவில் தவெக அரசா? பதவி விலக கூட தயார்” வன்னி அரசு பரபரப்பு INTERVIEW" src="https://www.youtube.com/embed/kvOXPCC7e4g" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

புற்றுநோயாளிகள் கவனத்திற்கு

இப்படியான நிலையில் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புற்றுநோயாளிகளின் அவசரகால பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரயில்வே துறை அவசரகால ஒதுக்கீட்டிற்கான நேரடி அணுகலை வழங்குகிறது என தெரிவித்தார். புற்றுநோயாளிகளும் அவர்களுக்கு உதவியாக செல்பவர்களும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட தனி கவுண்டர்கள் மூலம் பெறலாம்.

அந்த வசதியைப் பெறுவதற்குத் தேவையான மருத்துவ ஆவணங்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயணிகள் மத்திய அல்லது மாநில அரசின் சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை அல்லது நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரியால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். எய்ட்ஸ் நோயாளிகளைப் பொறுத்தவரை அந்தச் சான்றிதழ் ஒரு குறிப்பிட்ட ஆன்டி-ரெட்ரோவைரல் தெரபி (ART) மையத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ரயிலிலும் புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்காக அவசரகால ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 12 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்பு, ஏசி இரண்டாம் அடுக்கு, ஏசி மூன்றாம் அடுக்கு மற்றும் ஏசி சேர் கார் ஆகியவற்றில் தலா 2 படுக்கைகளும், ஸ்லீப்பர் வகுப்பில் 4 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு யாரெல்லாம் டிக்கெட் பெறலாம்?

எமர்ஜென்சி கோட்டா மூலம் மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள், அவசர அரசுப் பணி நிமித்தமாக உடனடியாகப் பயணம் செய்ய வேண்டிய அரசு அதிகாரிகள், எதிர்பாராத குடும்ப உறுப்பினர்கள் மரணத்தை சந்திப்பவர்கள் போன்றவர்கள் முறையான ஆவணங்களை சமர்பித்து கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறலாம்.

Source: Read Full Article