பாஸ்போர்ட்டில் தவறு இருப்பதை உணர்ந்த அதிகாரி மஞ்சுளா தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் தன்னுடைய பிறந்த தேதியை மாற்றி கத்தார் மற்றும் துபாய்க்கு சென்று இலங்கையில் இருந்து மதுரை திரும்பியது தெரியவந்தது.

மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் வாலிபர் கைது.

மதுரை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். மஞ்சுளா என்ற அதிகாரி சோதனை செய்தபோது சிவகங்கை மாவட்டம் தமராக்கி தெற்கு தெருவை சேர்ந்த தூதன் மகன் பாண்டி (42 )ஈன்பவர் பாஸ்போர்ட்டில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விமான பயணி பாண்டியனை கைது செய்தனர்.

இது குறித்து பாண்டியிடம் விசாரித்தது போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது பாஸ்போர்ட்டில் தவறு இருப்பதை உணர்ந்த அதிகாரி மஞ்சுளா தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் தன்னுடைய பிறந்த தேதியை மாற்றி கத்தார் மற்றும் துபாய்க்கு சென்று இலங்கையில் இருந்து மதுரை திரும்பியது தெரியவந்தது. இது குறித்து அதிகாரி மஞ்சுளா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விமான பயணி பாண்டியனை கைது செய்தனர்.

Source: Read Full Article