விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!

விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
News Image

தமிழக சட்டப்பேரவையில் நந்தன் கால்வாய் இணைப்புத்திட்டம் தொடர்பாக பாமக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதி நிலை அறிக்கை சார்ந்த நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மனிதவள மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, சரத்குமார் ஆகியோர் பதிலளித்தனர். இதில் விக்கிரவாண்டி தொகுதி பாமக எம்.எல்.ஏ. சிவகுமார் பேசினார்.

கோரிக்கைகளை அடுக்கிய பாமக எம்.எல்.ஏ.

அப்போது, “விக்கிரவாண்டியை தனி கோட்டமாக பிரித்து வானூர், விக்கிரவாண்டி தொகுதியை சேர்த்து தனி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட வேண்டும். விக்கிரவாண்டியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், சிங்கப்பெண் காவல் நிலையம் உருவாக்க வேண்டும். போக்குவரத்து காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகியவை வேண்டும்.

விக்கிரவாண்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்  என பல கோரிக்கைகளை முன்வைத்தார். அப்படியாக அவர் பேசும்போது, 27 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்துக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதித்துறை வசம் உள்ளது. அதற்கான நிதியை ஒதுக்கி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். மேலும் நந்தன் கால்வாய் திட்டத்தை 60 ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும், விழுப்புரத்தில் 22 ஏரிகளும் ஆகியவை ஏரி பாசனத்துக்கு பயன்படுத்த முடியும்” என பேசினார்.

என் துறையில கேள்வி கேளுங்க

உடனே குறுக்கிட்டு எழுந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நீர்வளத்துறை சார்ந்த கோரிக்கை எல்லாம் நாளைக்கு தான் வருகிறது. அண்ணன் ஆனந்திடம் கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் சிவகுமார் என்னிடம் கேட்கிறார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் பற்றி கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். நாளைக்கு அமைச்சர் ஆனந்தை கவனித்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.

அன்புமணி குழந்தையாக இருக்கப்ப அறிவித்த திட்டம்

இதற்கு பதிலளித்த சிவகுமார், நான் கேட்டது பற்றி நாளைக்கு அமைச்சர் ஆனந்த் பதிலளிப்பார் என நம்புகிறேன். ஏனென்றால் அந்த கால்வாய் திட்டத்தைப் பற்றி பேசாத அரசியல் தலைவர்களே கிடையாது. பாமக தலைவர் அன்புமணிக்கு 3 வயதாகும்போது அந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு அவருக்கு 57 வயதாகியும் அந்த திட்டம் வரவில்லை. அந்த திட்டம் வெறும் ரூ.75 கோடி தான். அதனால் துறை அமைச்சர் அதனை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். அவர் பேசியதைக் கேட்டு  முன்வரிசையில் அமர்ந்திருந்த  பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி குலுங்கு குலுங்கி சிரித்தார்.

இதையும் படிங்க: பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..

திமுக - அதிமுக காரசார விவாதம்

இதற்கு பதில் சொன்ன முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எங்கள் ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. அப்போது சிவகுமார் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்ததால் தெரியவில்லை என தெரிவித்தார். உடனே எழுந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நான் அமைச்சராக இருந்த ஜெயலலிதா காலக்கட்டத்தில் தான் நந்தன் கால்வாய் தூர்வாரப்பட்டது. அதன்பிறகு நிதி ஒதுக்கப்பட்டதாக திமுக சொல்கிறதே தவிர இதுவரை எந்த பணிகளும் அங்கு நடக்கவில்லை என தெரிவிக்கின்றேன் என கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks