ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
News Image

வங்காளதேச கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நடந்தது.

அசத்திய வங்கதேச பவுலிங்:

கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனே, ஹேசல்வுட், ஸ்டார்க் என பெரும்படை கொண்ட ஆஸ்திரேலியா வங்கதேசத்தை நையப்புடைத்துவிடும் என்றே பலரும் கருதினர். ஆனால், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவை வங்கதேசம் தனது பந்துவீச்சால் சுருட்டியது. டஸ்கின் அகமது வேகத்தில் 198 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாக, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அச்சுறுத்தும் என்று ரசிகர்கள் கருதினர்.

சதம் விளாசிய தமீம்:

ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் என அனுபவ ஜாம்பவான்களை திறம்பட சமாளித்து வங்கதேசம் ஆஸ்திரலியாவை திணறடித்தது. முதல் இன்னிங்சில் தன்சித் தமீமின் 101 ரன்கள், கேப்டன் ஷான்டோவின் 84 ரன்கள், மெஹிதி ஹாசனின் 65 ரன்கள் உதவியுடன் 426 ரன்களை வங்கதேசம் குவித்தது.

மிகப்பெரிய பின்னடைவுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலியாவிற்கு இந்த முறை மெஹிதி ஹாசன் தொல்லை கொடுத்தார். டிராவிஸ் ஹெட் 17 ரன்களுக்கும், ஸ்மித் 44 ரன்களுக்கும் அவுட்டாக கிரீன் மட்டும் 104 ரன்கள் விளாசினார். ஆனாலும், 284 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா வங்கதேசத்திற்கு 57 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆட்டத்தை தொடங்கிய வங்கதேசத்திற்கு முதல் இன்னிங்சில் சதம் விளாசிய தமிம் ஹேசில்வுட் பந்தில் ஸ்டம்பை பறிகொடுக்க வங்கதேசம் பதறிப்போனது.

வரலாற்று வெற்றி:

ஆனாலும், இஸ்லாம் - மொமினுல் ஹக் சிறப்பாக ஆடி 57 ரன்களை எட்டி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் மண்ணில் முதன்முறையாக வீழ்த்தினர். இந்த வரலாற்று வெற்றியை வங்கதேச ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டம்:

வங்கதேச வெற்றிக்கு ஹாசன் மகமூத் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியதும், இரண்டாவது இன்னிங்சில் மெஹிதி ஹாசன் 5 விக்கெட் வீழ்த்தியதும் முக்கிய காரணமாக அமைந்தது. ஹேசல்வுட், ஸ்டார்க், ஸ்மித், டிராவிஸ் ஹெட், லபுஷேனே,  நாதன் லயன் என முழு பலத்துடன் இறங்கிய ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வங்கதேசத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவும் வங்கதேசமும் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளது.இதில் வங்கதேசம் 2வது முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்துவது இது முதன்முறை ஆகும். இதற்கு முன்பு 2017ம் ஆண்டு டாகாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியாவை வங்கதேசம் வீழ்த்தி வரலாறு படைத்திருந்தது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks