தமிழ்நாட்டிற்கு நியாயமான தண்ணீர் உரிமையை பெற்று தர பிரதமர் மோடியிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கிறீர்களா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைகட்ட முயற்சிக்கும், தமிழகத்திற்கு உரிய நீரை தரமறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்தும் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ரயிலடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “ காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா காங்கிரஸ் அரசு மறுக்கிறது. அதேசமய்ம் உரிய நேரத்தில் தண்ணீர் பெற்று தராமல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கும் என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஏன் இவர்கள் யாரும் கர்நாடகாவுக்கு செல்லவில்லை” என கேள்வியெழுப்பினார்.

மாணிக்கம் தாகூர் கொடுத்த பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “கர்நாடகாவில் “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது” என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா உட்பட பாஜக தலைவர்கள் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை பார்க்கத் தவறிவிட்டீர்களா, நயினார் அண்ணே ?

கர்நாடகாவில் “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது” என்று @BSYBJP உட்பட பாஜக தலைவர்கள் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை பார்க்கத் தவறிவிட்டீர்களா, நயினார் அண்ணே @NainarBJP ?

ஒருவேளை பார்க்க மறந்துவிட்டீர்கள் என்றால், இதோ இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள்… pic.twitter.com/VcxbiZs0yy

— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 2, 2026

ஒருவேளை பார்க்க மறந்துவிட்டீர்கள் என்றால், இதோ இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் அவர்களின் ட்விட்டர் பக்கங்களைச் சற்று பாருங்கள். காவிரி உரிமையில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடும் எடியூரப்பாவையும் கர்நாடக பாஜகவையும் எதிர்க்க உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா?

Also Read: CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!

தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமை பெற பிரதமர் நரேந்திர மோடியிடமும், ஒன்றிய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?.. கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடுவது, டெல்லியில் மோடி அரசு மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பது, தமிழ்நாட்டிற்கு வந்து காங்கிரஸ் மீது பழியைப் போடுவது — இதுதான் பாஜகவின் அப்பட்டமான இரட்டை வேடம்!

உங்கள் இந்தப் பொய் நாடகத்தையும் போலி அரசியலையும் தமிழ்நாட்டு விவசாயிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article