அதிகாரம் கையில் இருக்கும் ஆணவமா? - தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

அதிகாரம் கையில் இருக்கும் ஆணவமா? - தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!
News Image

தமிழ்நாட்டில் காவல் நிலையங்களில் தொடரும் மரணங்களை தவெக அரசு கண்டிக்க மறுப்பதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

மதுரை அதிரவைத்த பூசாரி பரமசிவம் மரணம்

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் ஜோதிடராகவும், அர்ச்சகராகவும் பணியாற்றி வந்துள்ளார். இப்படியான நிலையில் புகார் ஒன்றிக் மதுரை சிந்தாமணி காவல் நிலைய போலீசாரால் விசாரணைக்கு பரமசிவம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின் வீடு திரும்பிய அவர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தன்னை தாக்கியதாக இறப்பதற்கு முன்பு பரமசிவம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதனை சிந்தாமணி போலீசார் மறுத்துள்ளனர். வீட்டில் தற்செயலாக கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக பரமசிவம் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பரமசிவனின் குடும்பத்தினர் அளித்த புகாரையடுத்து மாஜிஸ்திரேட் விசாரணை  நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பரமசிவம் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.3 பேர் கொண்ட குழுவை அமைத்து பிரேதப் பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பரமசிவம் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக சாடி வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதிகாரம் கையில் இருக்கும் ஆணவமா?

அவர் வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப் பதிவில், மதுரை மாவட்டத்தில், வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில்  பரமசிவம் என்ற கோவில் பூசாரியை விசாரணை என்ற பெயரில் சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலர்கள் கொடூரமாகத் தாக்கியதில், தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், சில காவலர்கள் பொதுமக்களிடம் அத்துமீறுவதும், சாமானியர்களை இப்படி அடித்து துன்புறுத்துவதும் கண்டிக்கத்தக்கது. கடந்த மாதம் நாகர்கோவில் சிறையில், காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட விசாரணைக் கைதி திரு. சபரி வர்மனின் மரணத்தில் இருந்து கூட, தவெக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லையா? தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களை கட்டுப்படுத்த, ஆளும் அரசு எம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது?

தேர்தலின் போது “லாக்-அப்” மரணங்கள் குறித்து பக்கம் பக்கமாக வசனம் பேசிய முதல்வர் விஜய்  தற்போது தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்தை கண்டும் காணாமல் கடந்து செல்வது ஏற்புடையதல்ல.எனவே, கோவில் பூசாரி பரமசிவம் அவர்களின் மரணம் குறித்த விசாரணை எவ்வித சமரசமும் இன்றி நடைபெற வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks