ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!

ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
News Image

மற்ற அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் எல்லா துறை சார்ந்த கேள்விகளுக்கும் ஆதவ் அர்ஜூனா பதில் சொல்வதை நிறுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் சம்பவம் செய்யும் ஆதவ் அர்ஜூனா

தமிழக சட்டப்பேரவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கியது. தற்போது பட்ஜெட் உரை மீதான மானியாக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர். அவர்களை தவிர அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பெரும்பாலான நேரங்களில் பதிலளிக்கின்றனர்.

இது சில நேரங்களில் சட்டசபையில் கருத்து மோதல் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது. துறைக்கு சம்பந்தமில்லாத அமைச்சர்கள் பதிலளிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக சாடியுள்ளார்.

ஆதவ் அர்ஜூனா மட்டும் தான் பேசணுமா?

அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் அந்த துறை சார்ந்து பதில் சொன்னா நல்லாருக்கும். ஆனால் எல்லா துறைக்கும் சேர்த்து 2,3 அமைச்சர்களே பேசுவதால் இந்த விவகாரம் திசை திருப்பப்படுகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை உதாரணமாக சொல்லலாம். அவர் விளையாட்டுத்துறைக்கு மட்டும் பேசினால் மற்ற அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நாம் சட்டசபையை விரைவாக முடிக்கலாம். ஆனால் எல்லா பிரச்னைக்கும் ஆதவ் அர்ஜூனா தான் பதில் சொல்றாரு. பாதி நேரம் அவர் தான் பேசுகிறார். இதனால் பேச வேண்டிய விஷயமும் திசை திருப்பப்படுகிறது. நேரமும் அதிகமாக எடுக்கிறது. இதுதான் இன்றைய உண்மை நிலை. இந்த விஷயத்தைன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் பார்க்கும்போது நான் சொல்லுவேன்.

என் தொகுதிக்கு மின்சாரம் தேவை

குறிப்பாக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை மிக முக்கியம். என் தொகுதியில் உள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில்  இருந்து மின்சாரம் தயாரிக்கிறோம். விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கே மின்சாரம் கிடைப்பதில்லை. விவசாயத்துக்கும் இல்லை. அந்த மின்சாரம் விருத்தாச்சலம் தொகுதிக்கும் கிடைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். ஒரு பக்கம்  மின்சாரம் பற்றாக்குறை, மறுபக்கம் மின் கட்டணம் உயர்வு என்பது இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தன்னுடைய முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்லி விட்டு இன்று வரை மின் கட்டணம் உயர்ந்து தான் வருகிறது. இதனையெல்லாம் சரி செய்து தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்ற வேண்டியது மின்சாரத்துறை அமைச்சர், முதலமைச்சரின் கடமையாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks