சுயவிளம்பரம் தேடுவதற்கு தமிழ்நாடு முதல்வரை பேசிருவீங்களா, உங்களை விட்ருவோமா, விடவே மாட்டோம்., முதல்வரை பேசியதற்கு நயினார் நாகேந்திரன் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். - உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் எச்சரிக்கை.

விஜய்-யை கேவலமாக பேசிவிட்டு நீங்க பாட்டுக்கு இருந்து விடுவீர்களா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் தலைமையில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்...," நயினார் நாகேந்திரனுக்கு கேவலமாக, அசிங்மாக இல்லையா, அவரது கட்சியை வளர்க்க தெரியவில்லை. அவரது கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் நாலு பேருக்கு நல்லது செய்யுங்கள்., அதை விட்டுவிட்டு தலைவர் விஜய்-யை கேவலமாக பேசிவிட்டு நீங்க பாட்டுக்கு இருந்து விடுவீர்களா., தமிழ்நாட்டு முதலைச்சர் அவரது இமையை கூட தொட விடமாட்டோம். நீங்க பாட்டுக்கு மைக்-ல பேசிட்டு, பேட்டி கொடுத்திட்டு போய்ருவீங்களா, விட்ருவோமா, விடவே மாட்டோம்., நயினார் நாகேந்திரன் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் தமிழ்நாடு முதல்வரை பேசியதற்கு. சுயவிளம்பரம் தேடுவதற்கு தமிழ்நாடு முதல்வரை பேசிருவீங்களா, உங்களை ஒரு போதும் விடமாட்டோம், முதல்வர் பக்கத்தில் நெருங்க கூட முடியாது, மக்களே உங்களை தடுத்துவிடுவார்கள். இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கீங்க இப்போதும் மத்தியில் ஆட்சியில் இருக்கீங்க தமிழ்நாடு மக்களுக்கு என்ன செய்துவிட்டீர்கள் பேசுவதற்கு., தமிழ்நாடு முதல்வரை பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா.

தவெகவை உசிலம்பட்டியில் அசைத்து கூட பார்க்க முடியாது

இன்னொருவர் முன்னாள் எம்எல்ஏவாகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த உதயக்குமார், உசிலம்பட்டியில் மதுரையின் 10 தொகுதியை அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தாலும் தவெகவை உசிலம்பட்டியில் அசைத்து கூட பார்க்க முடியாது. ஆர்.பி.உதயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டார் போல தினசரி முதல்வரை பற்றி பேசினால் தான் வீடியோவில் வருவோம் என தினசரி வீடியோ போடுகிறார்., எங்களை பற்றி வீடியோ போடுகிறேன் வீடியோ போடுகிறேன் என முதல்வரை நினைத்து தூங்குவதே இல்லை போல., வரும் உள்ளாட்சி தேர்தலில் அவரே விசில் சின்னத்திற்கு ஓட்டு கேட்டுவிடுவார் போல அதனால் நாம் கவலைப்பட தேவையில்லை., அவரே ஓட்டு கேட்கட்டும் அவரே வந்து ஓட்டு போட்டுவிடுவார். இன்னும் அமைச்சர் மனநிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தானே அர்த்தம் இன்னும் அமைச்சர் அமைச்சர்னு சொல்லிக் கொண்டு திரிகிறார். அவர் எம்எல்ஏ வுக்கு கூட தகுதி இல்லை என மக்கள் தகுதி நீக்கம் செய்துவிட்டனர், உனக்கு தகுதி இருக்கா தலைவரை ( விஜய் ) பற்றி பேசுவதற்கு., மிஸ்டர் முன்னாள் அமைச்சர் அவர்களே. அமைச்சராக இருந்த போது உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு நிரந்தர அரசாணை கொடுக்க முடிந்ததா, தண்ணீர் கொடுக்க முடிந்ததா., ஒரு சாக்கடை பிரச்னையை கூட சரி செய்ய முடிந்ததா. தலைவரை பற்றி பேசுவதற்கு செல்லம்பட்டியில் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, ஆர்ப்பாட்டம் செய்தால் பயந்துவிட்டு போய்விடுமா தவெக ஒரு போதும் பயப்பட மாட்டோம்., நீங்கள் எத்தனை தொகுதியும் அழைத்து வாங்க, தமிழ்நாட்டையே கூட்டி வந்து நீங்க சொன்னாலும் உங்களையோ, உங்கள் கட்சியவோ நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்., அண்ணன் சொல்வது போல மற்றும் பலர் தான் நீங்க., அவர் அடிக்கடி சொல்வார் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே என்று., வரும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே எதுமே இருக்காது" எனவும் பேசியுள்ளார்.

Source: Read Full Article