ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
News Image

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். அதேபோல திருவிழா காலங்கள் போன்ற முக்கிய நேரங்களில் பல்வேறு சிறப்பு ரயில்கள் மற்றும் ரயில் சேவைகளில் நேர மாற்றங்களும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக கர்நாடகா - கேரளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம் வழியாக கேரளம் மாநிலம் கோட்டயத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஹூப்ளியில் இருந்து கோட்டயத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 07351) வருகிற 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்படுகிறது.

இந்த ரயில் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 7.40 மணிக்கு சேலம் வந்தடையும்.பின்னர், சேலத்தில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மாலை 4.40 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறு மார்க்கத்தில், கோட்டையம்-ஹூப்ளி சிறப்பு ரயில் (07352) வருகிற 26-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோட்டையத்தில் இருந்து புறப்படுகிறது.

இந்த ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.10 மணிக்கு சேலம் வந்தடையும். தொடர்ந்து, இங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வழியாக இரவு 8.00 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே போல் கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வருகிற ஆக. 26-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தெலங்கானா மாநிலம் சாராலப்பள்ளியிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோட்டையத்திற்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சாராலப்பள்ளியிலிருந்து ஆக. 16-ம் தேதிமுதல் 30-ம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படும்.  இந்த ரயில் நல்கொண்டா, குண்டூர், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக கோட்டையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், கோட்டையம் - சாராலப்பள்ளி சிறப்பு ரயில் வரும் 17-ம் தேதிமுதல் வரும் 31-ம் தேதிவரை இயக்கப்படும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks