சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!

சபாநாயகர் முதல் எம்.எல்.ஏ. வரை.. தவெகவில் சீட் வாங்கிய கதையை எடுத்து விட்ட ஆனந்த்!
News Image

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சபாநாயகர் தொடங்கி தவெக எம்.எல்.ஏ.க்கள் வரை சீட் வாங்கிய கதையை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் தெரிவித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் எங்கள் கட்சிக்கு கிடைத்த வரம் என சொல்லலாம். அவர் தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதியைக் கேட்க, நான் முடியாது என சொல்லி விட்டேன். அதுதான் கண்டிப்பாக வேண்டும் என கேட்க, கோபப்படாதீர்கள். அங்கு 30 வருடமாக மாவட்டச் செயலாளர் இருக்கிறார். அந்த தொகுதியை மட்டும் விட்டு விடுங்கள் என கூறினேன்.

நேராக முதலமைச்சர் விஜய் சந்தித்து நான் இந்த தேர்தலில் நிற்கவில்லை என சபாநாயகர் தெரிவித்துவிட்டார். ஆனால் நீங்கள் தேர்தலில் நிற்க வேண்டும் வேறு எந்த தொகுதியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என விஜய் தெரிவித்தார். ஆனால் எனக்கு பதிலாக என் மகனுக்கு சீட்டு வழங்கி விடுங்கள் என ஜேசிடி பிரபாகர் கேட்டார். உடனே விஜய் 30 ஆண்டுகளாக என்னையே நம்பி சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டி கொடிகட்டி இன்றுவரை எனக்காக இருந்து வரும் அந்த ரசிகரை சாதாரண தொண்டனை கைவிடமாட்டேன். அதேபோல் நீங்களும் எனக்கு வேண்டும் என சொல்ல ஆயிரம் விளக்கு நின்று ஜெயித்து சபாநாயகராக பார்ப்பதற்கே அம்சமாக அமைந்துள்ளார்.

அமைச்சர்  செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வருகை தந்தார். அரசியலில் மூத்த அனுபவம் வாய்ந்த ஒருத்தர் வருகிறாரே என அவரை சென்று சந்தித்தேன். தலைவர் விஜய்க்கு செங்கோட்டையனை மிகவும் பிடிக்கும். அவர் நினைத்திருந்தால் தான் ஒன்பது முறை போட்டியிட்ட கோபிசெட்டிபாளையம் தொகுதியை கேட்டு வாங்கி இருக்க முடியும். ஆனால் செங்கோட்டையன் விஜயிடம் ஒரு விஷயத்தை முன் வைத்தார்.

நீங்கள் நான் நின்ற தொகுதியை கொடுப்பீர்களா அல்லது வேறு எந்த தொகுதியை கொடுப்பீர்கள்.. என கேட்டார். இதைக் கேட்டதும் என்ன நீங்கள் கொடுப்பீர்களா என கேட்கிறீர்கள் என ஆச்சரியப்பட்டோம். ஆனால் நீங்கள் எந்த தொகுதியை கொடுக்கிறீர்களோ அங்கு நான் நிற்பேன் என செங்கோட்டையன் தெரிவித்தார். ஒன்பது முறை எம்எல்ஏ, அமைச்சராக இருந்த செங்கோட்டையனின் பணிவு எப்படி இருக்கிறது என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

ஆதவ் அர்ஜுனா எனக்கு கண்டிப்பாக வேண்டும் என நான் முதல்வர் விஜய்யிடம் கேட்டேன். அவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவை என கேட்டு வாங்கினேன். ஆதவ் அர்ஜூனா ஒரு புத்தகம் வெளியிட்டதால் ஒரு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை நாங்கள் இழுத்துக் கொண்டு வந்து விட்டோம்.

அமைச்சர் அருண்ராஜ்

ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்த அமைச்சர் அருண்ராஜை எதற்காக அரசியல்? என கேட்டதற்கு, தான் உறுதியாக அரசியலுக்கு வர விரும்புவதாக தெரிவித்தார். அடிக்கடி முதலமைச்சர் விஜயை ரகசியமாக வந்து சந்தித்தார். இந்த சூழலை தவிர்க்கும் பொருட்டு நேரடியாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கூறினார். அருண்ராஜின் மாமனார், மாமியார் இருவரும் ஐஆர்எஸ் அதிகாரி என்பதால் தானே என் மகளை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். அரசியலுக்கு செல்வீர்கள் என தெரிந்தால் நான் கண்டிப்பாக பெண் வழங்கி இருக்க மாட்டோம் என கூறிய நிலைமையெல்லாம் வந்தது. இதனை எல்லாம் பார்த்த விஜய் ஐஆர்எஸ் பதவியை விட நீங்கள் கட்சியில் ஒரு நல்ல இடத்திற்கு வருவீர்கள். தைரியமாக ராஜினாமா செய்து விட்டு தேர்தல் நில்லுங்கள் என கூறினார்.

அதேபோல் அமைச்சர் ராஜ்மோகன் பேசிப் பேசியே அவர் அமைச்சராகிவிட்டார்.

அமைச்சர் வெங்கடரமணன் நீண்ட காலமாக விஜயிடம் பொருளாளராக பணியாற்றி வந்தார். இன்றைக்கு அவருக்கும் சீட் வழங்கி சட்டமன்ற உறுப்பினராக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் உள்ள எம்எல்ஏக்களில் பலர் ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்கள் தான்.

துணை சபாநாயகர் ரவிசங்கரை சட்டமன்ற தேர்தலில் நிற்க சொன்னோம். அதற்கு என்னிடம் வெறும் ரூ.75 ஆயிரம் மட்டும் தான் இருக்கிறது என கூறினார். அதுபோதும் என விஜய் சொன்னார். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினார். அதன்படி நின்று ஜெயித்து இன்று துணை சபாநாயகராகி விட்டார். அதேபோல் ரூ.1,000க்கு கூலி வேலை செய்த அய்யனாரையும் நாங்கள் MLAவாக மாற்றியுள்ளோம்” என அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks