இசையமைப்பாளர் அமீன் கார் விபத்து

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், இவரது மகன் ஏஆர் ஆர் அமீன், இவரும் பல திரைப்படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். நேற்று இரவு சென்னை கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் அருகே நண்பருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனின் கார் சென்ற போது மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அமீன் மற்றும் அவரது நண்பருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மகன் அமீன் இன்று அதிகாலை 3:30 மணியளவில் தனது விலை உயர்ந்த காரில் நண்பரோடு கிண்டி நோக்கி சென்றுள்ளார். அப்போது போது கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது பக்கவாட்டு சாலையில் வந்த மற்றொரு காரான ரேபிடோ வேகன்-ஆர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ரேபிடோ கார் மீது மோதி விபத்து

ஏ.ஆர் ரகுமான் மகன் ஒட்டி வந்த விலை உயர்ந்த காருக்கும் (போர்ஷ்), ராபிடோ வேகன்-ஆர் காரும் மோதியலில் விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் ஏ.ஆர் ரகுமான் மகன் அமீன் மற்றும் அவரது நண்பர் ஆகியோருக்கு சிறு காயம் ஏற்பட்டதில் அவர்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் சிகிச்சை

ராபிடோ வாகனத்தில் வந்த பயணிக்கு காயம் ஏற்பட்டதில் அவர்கள் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு பின் வீடு திரும்பினர். இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்தின் காரணமாக நடு ரோட்டில் கார் நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பிலும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article