ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு! 5 நாட்கள் சிறப்பு தரிசனம்.

ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு! 5 நாட்கள் சிறப்பு தரிசனம்.
News Image

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரியார் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற இக்கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் பக்தர்கள் இருமுடி கட்டி, 41 நாட்கள் கடும் விரதமிருந்து பதினெட்டு படிகள் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். ஜாதி, மத பேதமின்றி அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் மிகச்சில கோவில்களில் இதுவும் ஒன்று.

ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் ஏறும் இந்த 18 படிகளும், ஆன்மீகத்தில் 18 விதமான தத்துவங்களை அல்லது படிகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. வழக்கமாக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளும் (முதல் 5 நாட்களுக்கு) மாதாந்திர பூஜைக்காகத் திறக்கப்படுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் வழிபாடு நடைபெறும். பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இன்று மாலை திறப்பு ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று(திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்ட ரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். சிறப்பு பூஜைநாளை(செவ்வாய்கிழமை) முதல் 28-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 26-ந் தேதி திருவோண தினத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்கு ஓண சத்யா (விருந்து) வழங்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks