
<p>தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் பொதுமக்களின் நிதி சுமையை குறைக்கும் வகையில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடும் வகையில், எரிவாயு சிலிண்டர் தொகையை மக்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது</p>
<p>குடும்பத்தலைவிகளுக்கு பயன் பெறும் வகையில் அன்னாபூர்ணா திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும். அந்த சிலிண்டருக்கான பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எண்ணெய் நிறுவனங்களிடம் பயணாளிகளின் பட்டியல் பெறப்பட்டு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். </p>
<p>இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறுவார்கள். ஆண்டிற்கு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்ளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/what-is-the-mileage-of-the-maruti-suzuki-ertiga-per-litre-what-are-its-key-features-272137" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article