அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல் நடத்தி, போலி பணி ஆணையை வழங்கி மோசடி - மாவட்ட ஆட்சியர் அலுவலக பெண் அதிகாரியின் கணவர் மீது புகார்

ஊராட்சி செயலர் அரசுப் பணி

மதுரை மாவட்டம் குருவித்துறை அய்யப்ப நாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த தங்கபாண்டி. இவரது மகள் பிளஸ் டூ முடித்த நிலையில் தங்கபாண்டியனின் உறவினரான மாரி பாண்டியன் என்பவர் அறிமுகமாகி தனக்கு அதிகாரிகள் சிலரை நன்கு தெரியும் அதனால் பணம் கொடுத்தால் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் ஊராட்சி செயலர் அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி பணம் கேட்டுள்ளார். அதற்காக முன் பணமாக 30 ஆயிரம் ரூபாயை என GPAY மூலமாக பெற்றுள்ளார் இதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு என கூறி மீண்டும் GPAY மூலமாக பணம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் whatsapp மூலமாக பணிக்கான நேர்காணல் ஆணை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் அப்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். தங்கபாண்டியின் மகள் நேர்காணல் அட்டையுடன் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கிருந்த இருவர் சான்றிதழ்களை பெற்று விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

உத்தரவும் இல்லை

இதையடுத்து கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று whatsapp மூலமாக பணிஆணை உத்தரவை அனுப்பி வைத்து விட்டு ஜூலை 25ஆம் தேதி அன்று மேலும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணமாக மாரிப்பாண்டி பெற்றதோடு மொத்தமாக மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். மாரிப்பாண்டி அனுப்பிய பணி ஆணையை எடுத்துக்கொண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்கபாண்டியும் அவரது மகளும் நேரில் சென்று வழங்கியபோது அங்கிருந்த அதிகாரிகள் இது போன்ற எந்த உத்தரவும் இல்லை பணி ஆணை போலியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தங்கபாண்டியனிடம் காவல்துறையினரும் கடிதம் எழுதிவாங்கி அனுப்பியுள்ளனர்.

இதனால் தங்கப்பாண்டியும், அவரது மகளும் அதிர்ச்சியடைந்து மனமுடைந்து மாரிப்பாண்டியனை சந்திந்து கேட்ட போது இதுபோன்று நான் உன்னை மோசடியாக ஏமாற்றி விட்டேன் பணத்தை திரும்ப தந்துவிடுகிறேன் என கூறியுள்ளார். பின்னர் மாரிப்பாண்டி மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு மாத காலத்திற்குள் தருவதாக கூறி 100 ரூபாய் மதிப்பிலான பத்திரத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று மாரிபாண்டி Gpay மூலமாக 60 ஆயிரம் ரூபாய் மட்டும் தங்கபாண்டிக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் பணத்தை கேட்க தங்கப்பாண்டி வீட்டிற்கு சென்ற நிலையில தங்கபாண்டியின் மனைவி மற்றும் தங்கபாண்டி இருவரும் கடந்த 13ஆம் தேதி தங்கப்பாண்டி பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது தங்கபாண்டியனிடம் காவல்துறையினரும் கடிதம் எழுதிவாங்கி அனுப்பியுள்ளனர்.

தங்கபாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3 லட்சம் 80ஆயிரம் ரூபாய் பெற்று போலியான பணி ஆணை மற்றும் நேர்காணல் ஆணைகளை வழங்கி மோசடியில் ஈடுபட்ட மாரி பாண்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட தங்கபாண்டி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். போலியான பணி ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்ட மாரி பாண்டி என்பவருடைய மனைவி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலர் பணி எனக்கூறி போலியான பணி ஆணையை வழங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கபாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: Read Full Article