"தனிமையில் அடிக்கடி உல்லாசம்"

கர்நாடக மாநிலம் செங்காவி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி தேவம்மா ( வயது 50 ) இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக கணவனை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலாளியான நாகராஜ் ( வயது 55 ) என்பவரோடு வேலைக்கு செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக் காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

"அவன் கூட பேசாத"

இந்நிலையில் , லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியை 29 வயது இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னாள் கள்ளக் காதலனான நாகராஜை தவிர்த்து அந்த 29 வயது வாலிபருடன் பழக்கத்தை தொடர்ந்துள்ளார்.

இந்த விஷயம் நாகராஜின் தெரிய வந்ததை அடுத்து ஆத்திரமடைந்த அவர், "அவன் கூட பேசாத" என்றும் இந்த உறவை கண்டித்தும் உள்ளார். ஆனால் லட்சுமி தேவம்மா அதனைப் பொருட்படுத்தாமல் தனது புதிய காதலுடனான பழக்கத்தைத் தொடர்ந்துள்ளார்.

உருட்டு கட்டையால் தாக்கி கொலை

இதனால் , ஆத்திரமடைந்த நாகராஜ், லட்சுமி தேவம்மாவைத் தான் வேலை செய்யும் ஆழ்துளை கிணறு தோண்டும் இடத்திற்கு ஆசையாக பேசி தோட்டத்திற்கு ரகசியமாக வருமாறு அழைத்துள்ளார். நம்பி சென்ற பின்னர் இருவரும் வழக்கம் போல உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன் பிறகு , அந்த 29 வயது வாலிபர் யார் என்று கேட்டு மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார்.

இருவருமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்தில் நாகராஜ் அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் லட்சுமி தேவம்மாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை மறைக்க முயன்ற நாகராஜ் , அவரது உடலைத் தோட்டத்தின் மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளார்.

மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வந்த உரிமையாளர் , பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாகக் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் பாதி எரிந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் , கள்ளக் காதலன் நாகராஜை அதிரடியாகக் கைது செய்தனர்.

Source: Read Full Article