இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?

இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
News Image

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ தனது 20வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் பயணிகளுக்கு 20,000 இலவச விமான டிக்கெட்டுகளை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் தனது சேவையை தொடங்கி 20 ஆண்டுகள் முடிந்துள்ளன. இந்த 20 ஆண்டு கால வெற்றிகரமான சேவையை கொண்டாடும் விதமாக IndiGoFree என்ற பெயரில் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு அவர்கள் செலுத்திய விமான கட்டணம் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகைக்கான புக்கிங் காலம் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல்  தொடங்கியது. இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். உள்நாட்டு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

எகானமி கிளாஸ் (Economy Class) மற்றும் இண்டிகோஸ்ட்ரெச் (IndiGoStretch) பிரிவுகளில் டிக்கெட் பெறுபவர்கள் இந்த சலுகையை பெறலாம். இந்த இலவச டிக்கெட் சலுகையை பெற இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.goindigo.in அல்லது இண்டிகோ மொபைல் செயலி மூலமாக நேரடியாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதாவது மூன்றாம் தரப்பு இணையதளம் அல்லது செயலி வாயிலாக இண்டிகோ டிக்கெட் முன்பதிவு செய்தால் இது கிடைக்காது. டிராவல் ஏஜென்சிகள் அல்லது பிற செயலிகள் மூலமாக செய்யப்படும் டிக்கெட் முன்பதிவுகளுக்கு இது கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4 முதல் 6 வரை நேரடி புக்கிங் செய்த பயணிகளிலிருந்து ரேண்டம் முறையில் இண்டிகோ நிறுவனம் வெற்றியாளர்களை தேர்வு செய்யும். அதாவது உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கலாம் இல்லை என்றால் கிடைக்காது. வெற்றி பெறும் நபர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தகவல் அனுப்பப்படும். அப்படி உங்களுக்கு அனுப்பப்படும் தகவலில் இண்டிகோ தொடர்பான ஒரு எளிய கேள்வி கேட்கப்படும். அந்த கேள்விக்கு சரியாக பதிலளித்துவிட்டால், உங்கள் விமான கட்டணத்தில் அதிகபட்சம் 10,000 ரூபாய் வரை முழுமையாக ரீஃபண்ட் செய்யப்படும்.

பரிசு வென்ற வாடிக்கையாளர் எந்த வங்கி கணக்கில் இருந்து கட்டனம் செலுத்தினாரோ அதே கணக்கிலேயே வரவு வைக்கப்படும். மொத்தம் 20,000 பயணிகள் இதில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இண்டிகோ நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தான் டெல்லியில் இருந்து தனது முதல் விமான சேவையை தொடங்கியது. தற்போது 430-க்கும் மேற்பட்ட விமானங்களை கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக வளர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளொன்றுக்கு 2,200 விமான சேவைகளை வழங்குகிறது. இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையில் 50%க்கும் அதிகமாக பங்களிப்பை கொண்டுள்ளது இண்டிகோ.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks