நாகர்கோவிலில் விசாரணை கைதியாக இருந்த நபர் சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் சரமாரியாக சாடி வருகின்றனர். அந்த வகையில் வானதி சீனிவாசனும் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தவெக ஆட்சியிலும் இப்படியா?

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் தாமரை வர்மன். 35 வயதான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கடந்த ஜூலை 9ம் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜூலை 13ம் தேதி அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சபரிவர்மனை போலீசார் அடித்துக் கொன்றதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மாவட்ட நீதிபதி முன்பு நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சபரி வர்மன் உடலில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தமாக அவரது உடலில் 19 இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்தது. இதனிடையே சிறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஜூலை 12ம் தேதி சிறைக்குள் சபரிவர்மன் தாக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் விசாரணை கைதி மரணம் தொடர்பாக தனது கண்டனத்தை தவெக தலைவராக முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சபரிவர்மன் மரணம் தொடர்பாக நாகர்கோயில் சிறையின் தலைமை வார்டன் ஜெகன், துணை வார்டன்களான சிவகுமார் மற்றும் திருவிடை நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

வானதி சீனிவாசன் கடும் கண்டனம்

இதற்கிடையில் சபரிவர்மன் மரணம் தொடர்பாக பாஜக தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், காவல் நிலையங்கள் சித்ரவதைக் கூடங்கள் அல்ல.. நாகர்கோவிலில் சபரிவர்மன் என்ற மாற்றுத் திறனாளி இளைஞர் குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக நாகர்கோவில் மாவட்டச் சிறையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

நல்ல உடல்நலத்துடன் இருந்த இளைஞர் சபரிவர்மன் சிறையில் மர்மமான உயிரிழந்திருப்பது மீண்டும் ஓர் அஜித்குமார் சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் நீதிபதியின் முன் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!

காவல் நிலையங்களும், சிறைகளும் கைதிகளை நன்னெறிப்படுத்தவும், சட்டம் ஒழுங்கினை சரி செய்யவும் தானே தவிர இதுபோன்ற அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்தி உயிரிழக்கச் செய்யும் சித்ரவதைக் கூடங்கள் அல்ல. சாத்தான்குளம், திருப்புவனம் சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது நாகர்கோவிலிலும் காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணரும் வகையில் வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்திற்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article