தமிழக வெற்றிக் கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக சென்னை ஆளுநர் மாளிகையில் ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். இதனிடையே 107 எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சி சார்பில் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை இல்லாமல் தவெக தவித்தது. இதனைத் தொடர்ந்து விசிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது.

ஆனால் எதிர்பாராத ட்விஸ்டாக அதிமுக இரண்டாக பிளந்து அதில் 25 எம்.எல்.ஏ.,க்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். அமமுகவின் ஒரு எம்.எல்.ஏ.வும் ஆதரவு தெரிவித்தார். இதன் பின்னால் மிகப்பெரிய அளவில் குதிரைப்பேரம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியது.

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா

இந்த நிலையில் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து விராலிமலை மற்றும் கரூர் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அதிமுகவில் இருந்து பலரும் தவெக பக்கம் தாவி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களை தவெக அரசு குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்குவதாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ஆனால் தவெகவை ஆட்சியமைக்க விடாமல் தடுத்து திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முற்பட்டதே தாங்கள் கட்சியில் இருந்து விலக காரணம் என அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

ஒரே நேரத்தில் திமுக - அதிமுக புகார்

இந்த நிலையில் தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து திமுக, அதிமுக ஒரே நேரத்தில் புகார் அளித்தனர். திமுக தரப்பில் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., வில்சன், முன்னாள் எம்.எல்.ஏ., எழும்பூர் பரந்தாமன் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். அதேசமயம் அதிமுக தரப்பில் சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி., இருவரும் வருகை தந்தனர்.

இதனிடையே தவெக அரசு நடத்தி வரும் குதிரை பேரம் குறித்தும், கரூர் கொடுந்துயரம் குறித்து ஆதாரமற்றுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளிக்கப்பட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article