Traffic Rules: சொல்லியும் கேட்காத மக்கள்.. இனி அபராதம் தான்.. கார் சன் ரூஃபில் குழந்தைகளை வைக்காதீங்க!

Traffic Rules: சொல்லியும் கேட்காத மக்கள்.. இனி அபராதம் தான்.. கார் சன் ரூஃபில் குழந்தைகளை வைக்காதீங்க!
News Image

காரின் சன் ரூஃபில் குழந்தைகளை ஆபத்தான முறையில் நிற்க வைத்து சென்றால் சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

கார் சன் ரூஃப் வசதி

கார் சன்ரூஃப் என்பது சமீப காலமாக அனைத்து கார்களிலும் இடம் பெற்றுள்ள ஒரு வசதியாக பார்க்கப்படுகிறது. இது காரின் கேபினுக்குள் காற்றையும் ஒளியையும் அனுமதிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த பேனலை நாம் திறந்து மூட முடியும். ஆனால் இத்தகை கார்களின் சன் ரூஃப் பலருக்கும் விளையாட்டு இடமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளை அதில் நிற்க வைத்து காரை ஓட்டும் சம்பவமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.சன்ரூஃப் பயன்பாடு வெளியே நிற்பதற்கு அல்ல  என பலமுறை அறிவுறுத்தியும் அது குறைந்தபாடில்லை. இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் இதற்கு போக்குவரத்து போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இனி அபராதம் தான்

இந்த நிலையில் காரின் சன் ரூஃபில் குழந்தைகளை ஆபத்தான முறையில் நிற்க வைக்கக்கூடாது. ஆபத்தான முறையில் பயணித்த வாகன ஓட்டிக்கு மோட்டார் வாகன சட்டம் 184ன் கீழ் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மற்ற மாவட்டங்களிலும் அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சன் ரூஃபால் என்ன ஆபத்து?

காரில் உள்ள சன்ரூஃப் வழியாக குழந்தைகளை வெளியே நிற்க வைப்பது மிகவும் ஆபத்தான செயலாகும். இதனால் அவர்களுக்கு கடுமையான காயங்கள், சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது விதியாகும். ஆனால் சன் ரூஃப் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் நிற்பதால் கார் திடீரென நிறுத்தப்படும்போது குழந்தைகள் வெளியே தூக்கி வீசப்படவோ அல்லது உடலில் கடுமையான காயங்கள் ஏற்படவோ வாய்ப்புள்ளது.

Also Read: Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!

சன்ரூஃப் கண்ணாடியின் விளிம்புகள் கூர்மையாக இருக்கும் என்பதால் அது குழந்தையின் முகம், கழுத்து பகுதியில் காயங்களை உண்டாக்கலாம். சாலையில் செல்லும்போது சன் ரூஃப் வழியாக நிற்கும் குழந்தைகள் முகத்தில் பூச்சிகள், மரக்கிளைகள், மின்சார ஒயர்கள், பறவைகள் போன்றவை எதிர்பாராத விதமாக மோத வாய்ப்புள்ளது. குழந்தை சீட் பெல்ட் அணியாமல் நிற்பதால் ஏதேனும் விபத்து ஏற்படும்போது காரில் ஏர் பேக் வேலை செய்யாமல் அவர்களின் உயிருக்கே அச்சுறுத்தல் உண்டாகலாம். இதெல்லாம் நன்கு தெரிந்தும் குழந்தைகள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் கொண்டாட்டம் என்ற பெயரில் பெரியவர்களும் ஏறி ஆபத்தை தாங்களே தேடிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks