TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு

TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க-  மின்வாரியம் முக்கிய உத்தரவு
News Image

மின்சாரமும் மக்களின் வாழ்க்கையும்

நவீன காலத்தில் மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் சமையல் முதல் ரயிலை இயக்குவரை வரை மின்சாரம் கட்டாய தேவையாக உள்ளது. முன்பெல்லாம் பல மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டாலும் எப்போ மின்சாரம் வரும் என காத்திருந்த நிலையில், தற்போது மின் வெட்டு ஏற்பட்ட அடுத்த நொடியே மின்சார அலுவலகத்திற்கு போன் மூலம் மின்சாரம் எப்போது வரும் கேட்கும் நிலையானது உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு மக்களின் வாழ்கையில் இணைந்துள்ளது மின்சாரம். அந்த வகையில், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு 500 யூனிட்டிற்குள் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதிக மின் கட்டண புகார்

இதனால் மக்கள் உற்சாகத்தில் இருந்த நிலையில், எப்போதும் 400 ரூபாய் என்ற அளவில் வந்த மின் கட்டணம் கடந்த மாதம் 1200, 3000 என பல மடங்கு அதிகமாக வந்த்து. இது தொடர்பாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ஒரு சில இடங்களில் மின் கட்டணம் அதிகம் வந்ததை மின்சார வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட இடங்களில் மின்சார கணக்கீடு குளறுபடி, பழைய மின் மீட்டர் ஆகியவைதான் காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிகளவு மின் கட்டணம் வந்ததாக புகாரையடுத்து சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளில் மறுஆய்வு TNPDCL உத்தரவிட்டுளறளது.

3.70 லட்சம் வீடுகளில் நேரில் ஆய்வு

அந்த வகையில், ஜூலை 2026 மாதத்தில் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, அதிக மின் நுகர்வு பதிவான வீட்டு மின் இணைப்புகளில் மறுஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, TNPDCL தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வி. அருண் ராய் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,  ஜூலை  மாதத்தில், மே மாத மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் மின் பயன்பாடு பதிவான 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் மூத்த அதிகாரிகளால் நேரடியாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தவறுகள் இருந்தால் உரிய திருத்தம் செய்யுங்கள்

இந்த ஆய்வுப் பணியில் தலைமைப் பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், கணக்கு அதிகாரிகள், மதிப்பீட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிலை அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மின் கட்டணம் அதிகம் என கூறப்பட்டுள்ள வீடுகள், அலுவலகங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.  ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக உரிய திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks