பொதுவாக, பலகுரல் மன்னர்கள், அதாவது மிம்மிக்ரி செய்பவர்களை நாம் பார்த்திருப்போம். அது, வசனங்களை வைத்து அப்படி செய்வார்கள். ஆனால், பாடுவதிலேயே மிம்மிக்ரி செய்தவர் மறைந்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகி. பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனை செய்தது மட்டுமல்லாமல், பல்வேறு விதமான குரல்களிலும் பாடி அசத்தியுள்ளார் ஜானகி.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ற குரல் பாணி

அதாவது, குழந்தை கதாபாத்திரம் என்றால், குழந்தை போலவே குரலை மாற்றிப் பாடுவார். அதேபோல், கதாநாயகிகளுக்கு பாடும்போது, நேர்த்தியாக மட்டமில்லாமல், சினுங்கல்கள், ஏக்கங்கள், காதல் என அத்தனை உணர்வுகளையும் தனது குரலில் கொண்டுவந்து, கேட்போரை அதே உணர்வுக்கு கொண்டு சென்றுவிடுவார். வயதான கதாபாத்திரம் என்றாலும், அதாவது, ஒரு கிழவி பாடுவது போல் இருந்தாலும், அப்படியே ஒரு பாட்டியின் குரலிலேயே பாடுவார். இப்படி, தனது அசாத்திய திறமையால், திரை ரசிகர்களை தன் குரலால் கட்டிப் போட்டவர் எஸ். ஜானகி.

குழந்தையாகவே மாறி பாடிய ஜானகி

குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடும்போது, அப்படியே அவர்கள் பாடுவது போலவே தனது குரலை மாற்றிப் பாடுவார் ஜானகி. அப்படி அவர் பாடிய பாடல்களில் பிரபலமானவை, டூத் பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு, டாடி டாடி ஓ மை டாடி, ஐ ஏம் எ லிட்டில் ஸ்டார், ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான், எனது கானம் உன் காதில் விழவில்லையா, சின்னச்சின்ன பூவே, யாருன்னு கேக்குரியா அண்ணே அண்ணே, ராஜா மகள் ரோஜா மகள் என ஏராளமான பாடல்களை கூறலாம்.

காதல், கொஞ்சல், சினுங்கல், பாட்டி குரல்

இதேபோல், கதாநாயகிகளுக்கு காதல் பாடல்கள் மட்டுமில்லாமல், சினுங்கல்களுடன் கூடிய பாடல்கள், ஐட்டம் சாங் என அந்தந்த பாடல்களுக்கு ஏற்றவாறு கொஞ்சியும், சினுங்கியும் பாடியிருப்பார். அப்படி பிரபலமான பாடல்களில், பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, ஹே பாடல் ஒன்று, நினைவோ ஒரு பறவை, தேன் பூவே பூவே வா, தங்கச் சங்கிலி, சங்கத்தில் பாடாத கவிதை, எங்கெங்கோ செல்லும், சிப்பி இருக்குது முத்தும் இருக்குது, ஆயிரம் தாமரை மொட்டுக்களே, தாலாட்டுதே வானம், மலரே குறிஞ்சி மலரே, காதல் வைபோகமே, தேன் சிந்துதே வானம், மின்மினிக்கு கண்ணில் ஒரு, சிறு பொன்மணி, பேரை சொல்லவா, முதன் முதலாக காதல் டூயட், நேத்து ராத்திரி யம்மா, நிலா காயுது நேரம் நல்ல நேரம், பூ போட்ட தாவணி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இதேபோல், ஆட்டுகுட்டி முட்டையிட்டு பாடலில், அசல் கிழவி போலவே பாடியிருப்பார். அதேபோல், உதிரிப் பூக்கள் படத்தில் போடா போடா பொக்க போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம். இது மட்டுமல்லாமல், சிங்கார வேலனே தேவா உள்ளிட்ட பல கர்நாடக சங்கீத பாணியில் அமைந்த பாடல்களையும் அனாயாசமாக பாடி நம்மை மகிழ்வித்துள்ளார். இப்படி, எஸ். ஜானகியின் திறமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பாடகியை தற்போது திரை உலகம் இழந்துள்ளது.

Source: Read Full Article