ஓய்வூதிய திட்டம்

அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு மாத ஓய்வூதியமானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தனது ஓய்வு காலத்தில் வரும் ஓய்வூதியத்தை வைத்து பயனடைந்து வருகிறார்கள். அதே நேரம் தனியார் நிறுவனங்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் இல்லாததால் பரிதவித்து வருகிறார்கள். இந்த நிலையில், 8 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து பயனடையலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

மத்திய அரசின் தொழிளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை எட்டியபின் மாதந்தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் சேர்ந்து பயனடையலாம். பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டம் 18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும்.

இத்திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிரணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்ததால், இந்திய அரசும் அதே அளவி இணைப் பங்களிப்பை வழங்கும்.இதன் மூலம், 60 வயதை அடைந்த பின்னர் மாதந்தொறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் ஓய்வூதிய திட்டம்

சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளர்கள் (Tourist Guides), துப்புரவுப் பணியாளர்கள் (House Keeping Staffs). கைவினைக் கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள். உணவக மற்றும் உணவுச் சேவை வழங்குநர்கள், மேலும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பிற சேவை பயனடையத் வழங்குநர்கள் ஆகியோர் தகுதியுடையவர்களாவர். இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை, சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம் (Passbook) மற்றும் கைப்பேசி எண்ணுடன். அருகிலுள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre CSC) அணுகி, இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓய்வூதியம் - விண்ணப்பிப்பது எப்படி.?

எனவே, சென்னை மாவட்டத்திலுள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தகுதியுடைய தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும், இதன் மூலம் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பும், பொருளாதார நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர். சென்னை அவர்கள் தெரிவித்தார்கள். மேலும், விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சென்னை அவர்களை தொடர்பு கொள்ளவும்: முகவரி: சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், சென்னை சுற்றுலா வளாகம், சென்னை கைபேசி எண்.9176995863

Source: Read Full Article