One Last Time... திரையரங்குகளில் 'ஜனநாயகன்' தர்பார்! அதிரும் தமிழ்நாடு, அலறும் திரையரங்குகள்!

One Last Time... திரையரங்குகளில் 'ஜனநாயகன்' தர்பார்! அதிரும் தமிழ்நாடு, அலறும் திரையரங்குகள்!
News Image

புதுச்சேரி: முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் திண்டிவனத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

ஜனநாயகம் திரைப்படம்

முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைக் கடந்து இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான இதில், விஜய் உடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் விஜய்யின் திரைப்பயணத்தில் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதால், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் சுமார் 3,500 திரையரங்குகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது.

இத்திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், விஜய் ரசிகர்களும் த.வெ.க. தொண்டர்களும் நேற்று இரவு முதலே திரையரங்குகளில் திரண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.

விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் விஜய்யின் பிரமாண்ட கட்-அவுட்களும், விஜயின் திரைப்பயணத்தை அடங்கிய வண்ணமயமான பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து திரையரங்கு வளாகங்களை ரசிகர்கள் திருவிழா கோலமாக மாற்றியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படுகிறது. கடந்த 7 மாதங்களாக இத்திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், முதல் காட்சியைக் காண்பதற்காக அதிகாலையிலேயே திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks