ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்

கேரளா மாநிலத்தின் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி மன்னரின் வருகையை நினைவுகூரும் வகையில் பூக்கலம், ஓணசாத்யா, படகுப் போட்டி, புலிக்கலி போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகையானது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை 10 நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வெளியூரில் இருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மக்கள் செல்லும் வகையில் 100 சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இதன் முதல் கட்டமாக சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே மூன்று வழித்தடங்களில் மொத்தம் 16 சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. இதன் படி, சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல், தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் மங்களூர், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு ரயில் இயக்கப்படவுள்ளது.

1. மங்களூரு – சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில்

ரயில் எண்: 06126

மங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜூலை 13, 20, 27 மற்றும் ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய திங்கட்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06125) சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும். மொத்தம் 8 சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்

ரயில் எண்: 06119

ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய புதன்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06120) வியாழக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் எனவும் மொத்தம் 4 சேவைகள் இயக்கப்படவுள்ளது.

3. திருவனந்தபுரம் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்

ரயில் எண்: 06110

ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் புதன்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06109) வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் எனவும் மொத்தம் 4 சேவைகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ( ஜூலை 9)இன்று காலை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Source: Read Full Article