ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, தனது தந்தையும் முன்னோடியுமான அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்று எச்சரித்து, கடுமையான வார்த்தைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார்.

"உயர்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பெயர்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள, தியாகி தலைவரின் குற்றவாளிகளும் இழிவான கொலையாளிகளும், தாங்கள் கனவு காணும் அமைதியான மரணத்தை ஒருபோதும் அடைய மாட்டார்கள்," என்று அவர் கூறியுள்ளார்.

அவர் தனது தந்தைக்கும் முன்னோடிக்கும் அஞ்சலி செலுத்தி, அவரை "அநியாயமாகக் கொல்லப்பட்டவர்" என்றும் "இறைவனின் நீதியுள்ள ஊழியர்" என்றும் கூறியதோடு, அவரது மரபை பேணிப் பாதுகாப்பதாகவும் உறுதிபடக் கூறியுள்ளார்.

‘பழி வாங்குவோம்‘ என கூறும் மொஜ்தபா

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மொஜ்தபா கமேனி, “அநியாயமாக கொல்லப்பட்ட தலைவரே! இறைவனின் நீதியுள்ள அடியாரே! உமது மரபுச் சொத்தைப் பாதுகாக்கவும், நீர் வகுத்த பாதையை உறுதியாகப் பின்பற்றவும், வழியில் ஏற்படும் எந்தச் சிரமத்திற்கும் அஞ்சாமல் இருக்கவும், நீர் நம்பிய தெய்வீக வாக்குறுதிகளுக்கும் நற்செய்திகளுக்கும் பக்தியுடன் நிலைத்திருக்கவும் நாங்கள் உறுதி ஏற்கிறோம்.“ என்று கூறியுள்ளார்.

To our martyred Leader: O unjustly slain Leader! O righteous servant of God! We pledge to safeguard your legacy, to steadfastly traverse the straight path you laid out, to fear no hardships along the way, and to attach our hearts to divine promises and glad tidings as you did.

— Ayatollah Mojtaba Khamenei (@MKhamenei_ir) July 11, 2026

மறைந்த தலைவருக்கும் இமாம் ஹுசைனுக்கும் இடையே ஒப்புமைகளைச் சுட்டிக்காட்டிய கமேனி, ஹுசைனின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காகவும் அவரது எதிரிகளை எதிர்ப்பதற்காகவும் ஈரானிய தேசம் நீண்ட காலமாகத் தன் மக்களை பலியிட்டு வந்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், ஈரான் இப்போது பழிவாங்க முயல்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதாவது, "குற்றவாளிகளும், இழிவான கொலைகாரர்களும் பழிவாங்குவதன் மூலம், இந்த இரண்டு [சமீபத்திய] போர்களில் உயிர்நீத்த உங்கள் தூய ரத்தத்திற்கும், அனைத்து தியாகிகளின் ரத்தத்திற்கும் நாங்கள் பழிதீர்ப்போம் என உறுதி ஏற்கிறோம். இந்த பழிவாங்கலைத்தான் நமது தேசம் கோருகிறது, இது நிச்சயமாகச் செய்யப்பட வேண்டும்," என்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

துக்கம் அனுசரிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்த மொஜ்தபா

ஈரான் மற்றும் ஈராக் முழுவதும், குறிப்பாக டெஹ்ரான், கோம், நஜாஃப், கர்பலா மற்றும் மஷ்ஹத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்ட கோடிக்கணக்கானோருக்கு மொஜ்தபா நன்றி தெரிவித்தார். இந்த வருகையை "வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்று கூறிய அவர், இது மறைந்த தலைவரின் மரபுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்த அடுத்தடுத்த பதிவுகளில், அவர், அயதுல்லா அலி கமேனியை இமாம் ஹுசைனின் பின்பற்றுபவராக மீண்டும் மீண்டும் சித்தரித்து, அவர் ஹுசைனி மரபின் கொள்கைகளின்படி வாழ்ந்து, போராடி, இறுதியில் மரணமடைந்தார் என்று கூறினார். மேலும், ஈரானின் இஸ்லாமியப் புரட்சியானது இமாம் ஹுசைனின் போதனைகளிலும் லட்சியங்களிலும் வேரூன்றியிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தை அயதுல்லா அலி கமேனிக்காக, பல மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இறுதிச் சடங்குகளின் போது மொஜ்தபா இந்த அறிக்கையை வெளியிட்டார்.

Source: Read Full Article