Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி

Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
News Image

தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான இயக்குனர் லிங்குசாமி. இவரது ரன் படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில், இவர் சமீபத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணனுக்கு பேட்டி அளித்தார்.

விஜய் சந்திக்காத விமர்சனமா?

அப்போது, அவர் கூறியதாவது, இன்றைய முதலமைச்சர் விஜய் சந்திக்காத விமர்சனங்களா? முதல் படத்தில் அவர் சந்தித்த விமர்சனம் என்ன? மிக கடுமையான விமர்சனம். அவரைப் பார்ப்பதற்காக இன்று தெருவில் எப்படி நிற்கிறார்கள்? இந்த முகத்தை இரண்டே கால் மணி நேரம் பார்க்க முடியுமா? என்று பலரும் பேசிய நிலையில், இன்று அவர் தெருவில் போனால் ராமனா தோள் கண்டால் போதும் என்ற நிலையில் பார்க்கிறார்கள். இதை எப்படி அவரால் மாற்ற முடிந்தது?

அவர் அனைத்தையும் கேட்டார். ஆனால், எதையும் கண்டுக்கல. தன் உழைப்பு மூலமாக, நேரத்திற்கு போவதன் மூலமாக கடும் உழைப்பால் வந்தார். அந்த நம்பிக்கைத்தான். நீ என்ன வேண்டுமானாலும் பேசு? இரண்டு வருஷம்தான் ஆகிறது, அவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் இருக்கிறார்கள் என்று என்னென்னமோ பேசினார்கள்.

உதாரணம்:

நான் பார்த்துக்குறேன். இன்று யாராவது வாழ்க்கையில் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், சாதிக்க வேண்டும் என்றால் அவரைப் பார். எந்த துறையாக இருந்தாலும் அவரைப் பார். பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியாது என்றார்கள். சாதி, மதம் இருக்கிறது என்றனர்.

என்னென்னமோ சொன்னார்கள்? தெளிவானவர். எனக்கே அவர் உதாரணமாக உள்ளார்.  என்ன ஒரு ஆற்றல்? என்ன ஒரு நேர்மறை எண்ணம்? என்ன வேண்டுமானாலும் கூறட்டும் சந்தோஷமாக இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். நம்பிக்கையுடன் இருங்கள் என்றார். ஒரு ஒளி பொருந்திய மகன் கிடைத்துள்ளார். நான் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

தன்னம்பிக்கை:

அவர் தன்னம்பிக்கைதான் அவரது வெற்றி. பொறுத்தார் பூமியாள்வார் அந்த வார்த்தை நிஜம். மாபெரும் பொறுமை. கதை கேட்டார். படம் பண்றாரு. நேரத்திற்கு போகல, தயாரிப்பாளரை ஏமாத்திட்டாருனு இவரால இப்படி ஆச்சுனு ஒரு விஷயம் சொல்லவே முடியாது. அவர் வேலையை அவர் பார்க்குறாரு. எல்லார்கிட்டயும் இருந்து எடுத்துக்கொள்கிறார்.

மிகச்சரியாக போய்க்கொண்டிருக்கிறார். கேட்கவே சந்தோஷமாக உள்ளது. மக்களுக்கு நல்லது நடந்தாலே நமக்கு சந்தோஷம்தான். சரியான ஒருவர் வந்துள்ளார். அதுவும் திரைத்துறையில் இருந்து வந்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

லிங்குசாமி விஜய்யை வைத்து ஒரு படம் கூட நேரடியாக இயக்கியதில்லை. லிங்குசாமியின் வெற்றிப்படங்களான ரன் மற்றும் சண்டைக்கோழி படங்களின் கதையை முதலில் அவர் விஜய்யிடமே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks