IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!

IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
News Image

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக டி20 தொடரை இழந்த பிறகு இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடரில் இன்று களமிறங்கியது. தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணி இன்று களமிறங்கியதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.

சிறப்பான பவுலிங்:

அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, இஷன் கிஷன், பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா என இளம் பட்டாளத்துடன் ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களான ப்ரையன் பென்னட் - பென் கரனை பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் காலி செய்தனர். அனுபவமிகுந்த கேப்டன் சிக்கந்தர் ராசாவை 4 ரன்னில் ஷிவம் துபே அவுட்டாக்க 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அவர்கள் இழந்தனர்.

126 ரன்கள் டார்கெட்:

ரியான் பர்ல் - வெஸ்லி மாதவரே ஜோடி ஓரளவு நிதானமாக ஆடினர். ரியான் பர்ல் 26 ரன்களும், வெஸ்லி மாதவரே 39 ரன்களும் எடுக்க கடைசியில் மருமனி 20 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்தார். இதனால், 20 ஓவர்களில் 125 ரன்களை 7 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே எடுத்தது.

128 ரன்கள் இலக்கு என்று களமிறங்கிய இந்தியாவிற்கு அபிஷேக் சர்மா 1 ரன்னில் அவுட்டாக, சூர்யவன்ஷி சுட்டெரித்தார். அவர் பவுண்டரி, சிக்ஸருமாக விளாச ஆட்டம் முழுமையாக இந்தியா கட்டுக்குள் வந்தது. அவர் 19 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். இஷான் கிஷான் 35 ரன்களில் அவுட்டாக, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுக்க திலக் வர்மா 6 ரன்கள் எடுக்க இந்திய அணி 13.2 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிப் பாதைக்கு திரும்பிய இந்தியா:

இதையடுத்து, இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. இந்திய அணி இன்னும் 2 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் ஆட உள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் ஒரு வெற்றி கூட பெறாத இந்திய அணி இந்த தொடரில் முழுமையாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இளம் பந்துவீச்சாளர்களான மயங்க் யாதவ், அசோக் சர்மா, பிரின்ஸ் யாதவ் சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.  இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பெடுத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு கேப்டனாக கிடைத்துள்ள முதல் வெற்றி இதுவாகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks