EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு

EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
News Image

மின்சார வாகனம் - அள்ளி கொடுக்கும் மானியம்

நாளுக்கு நாள் நவீனமயமாகி வரும் காலத்தில் வீட்டிற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள் வாங்கி வருகிறார்கள். இதனால் சுற்று சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையானது உள்ளது. எனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் பெட்ரோல், டீசல் விலையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை வாங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. அதற்கு ஏற்ப பல்வேறு மானிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மின்சார வாகனங்களால் காற்று மாசு பெரும் அளவில் குறையும் என்பதால் அந்த வாகனங்ளுக்கு வரியும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவிப்பு

அந்த வகையில் பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனை இந்திய மக்களும் போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள். அதே நேரம் நீண்ட தூரம் வெளியில் செல்லும் போது போதுமான சார்ஜிங் வசதி இல்லாத காரணத்தால் நடு வழியில் தவிக்க வேண்டிய நிலையானது உள்ளது. எனவே இதற்காகவே நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களை அதிகளவு வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில், இதனை கருத்தில் கொண்டு மின்சார வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக தமிழகத்தில் 20 ஆயிரம் பொது மினாசர சார்ஜிங் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே முக்கிய நகரங்களில் மட்டும் சார்ஜிங் நிலையங்கள் உள்ள நிலையில், அதனை இரண்டாம் நகரங்களிலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

20 ஆயிரம் சார்ஜிங் நிலையங்கள்

அந்த வகையில், தமிழ்நாட்டில் இருக்கும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில், தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில் இன்று ITDP இந்தியா மற்றும் வழிகாட்டி தமிழ்நாடு அமைப்புகளுடன் இன்று உயர்மட்ட தொழில்நுட்பக் கூட்டம் நடைபெற்றது. சுற்றுசூழல் மாசை குறைக்க மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், இதன்மூலம் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

அந்த வகையில் தமிழ்நாடு அரசு 2031ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவால் வரும் நாட்களில் மின்சார வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks