ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு மேலும் அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிப்பதற்கு சமம் என அவர் கூறியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் தங்கள் நாட்டு கப்பல்கள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அதற்குப் பதிலடியாக பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் துறைமுக நகரங்களிலும், கெஷ்ம் தீவிலும் உள்ள ஈரானிய சொத்துக்கள் மீது அமெரிக்கா பெரும் தாக்குதல்களை நடத்தியது. இது நிகழ்ந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு துருக்கியில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய அவர், இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். இதனால் உலகளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கடந்த மாதம் ஈரானுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கேட்டபோது அவர் அதுபற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். அதாவது, என்னைப் பொறுத்தவரை, அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்டது. நான் இனி அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என கூறினார். தொடர்ந்து ஈரானியத் தலைமை குறித்து பேசிய ட்ரம்ப், “அவர்கள் கழிசடைகள். அவர்கள் நோயாளிகள். அவர்கள் கொடூரமான, வன்முறை குணம் கொண்டவர்கள். அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால், அதைப் பயன்படுத்துவார்கள்” என கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும். என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. எனினும் அமெரிக்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

பின்னணி என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் உச்சத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் 3 வாரங்களுக்குப் பிறகும் அமெரிக்காவும் ஈரானும் தங்களின் நிலையற்ற போர் நிறுத்தத்தைப் பேணுவதற்குப் போராடி வருகின்றன. இதற்கு காரணமாக உலகளாவிய எரிசக்தியில் 20% பாயும் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான தனது உரிமையைப் பயன்படுத்திக் கொள்ள ஈரான் மேற்கொள்ளும் முயற்சியே இந்த அமைதியின்மைக்குப் பின்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Also Read: வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!

இதனிடையே முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக ஈரான் ஒரு வார கால இறுதிச் சடங்குகளை நடத்தி வருகிறது. ஜூலை 9ம் தேதி இந்த இறுதிச் சடங்கு முடியவுள்ள நிலையில், இதன் பிறகு போர் நிறுத்தத்திற்கான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருந்ததாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் இந்த நிலையில் செவ்வாயன்று நடைபெற்ற தாக்குதல்கள் இந்த அமைதியை ஒட்டுமொத்தமாக குலைத்துள்ளது. போரை நிறுத்துவதற்கான இடைக்கால ஒப்பந்தம் முறிந்து மத்திய கிழக்கு மீண்டும் அதிரடி தாக்குதலுக்கும், பதற்றமான சூழலுக்கும் தயாராகி வருகிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article