வியட்நாமின் ஃபு குவோக் தீவுக்கு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வேகப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், தமிழர் உட்பட குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். தற்போதைய தகவல்களின்படி, 10 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கள் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவையும் போட்டுள்ளார்.

“இறந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை“

இது குறித்த தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.

இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.“ என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும்,…

— CMOTamilNadu (@CMOTamilnadu) July 11, 2026

விபத்து நிகழ்ந்தது எப்படி.?

விபத்து குறித்து வெளியான தகவல்களின்படி, ஓஷன் பேர்ல் ஐலேண்ட் கம்பெனியால் இயக்கப்படும் அந்த வேகப் படகு, உள்ளூர் நேரப்படி, மதியம் 1 மணியளவில் ஹான் மே ரட்-இலிருந்து ஆன் தோய் துறைமுகத்திற்கு புறப்பட்டுள்ளது. அது கரையிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சென்றபோது கவிழ்ந்துள்ளது. அதில், படகில் இருந்த அனைவரும் கடலில் வீசப்பட்டுள்ளனர்.

அருகிலிருந்த சுற்றுலாப் படகு நடத்துநர்கள் இந்த விபத்தை பார்த்த உடன், மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக சில நிமிடங்களிலேயே அந்த இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், படகு முழுவதுமாக கவிழ்ந்ததால், பல பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதனால், மீட்புப் பணி சவாலாக அமைந்தது.

இந்த விபத்தில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாகவும், பலர் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த படகில் பயணம் செய்த 32 பேல், 19 பேர் தமிழர்கள் என கூறப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, விபத்தில் 10 தமிழர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article