அதிமுகவும், தமிழக வெற்றிக் கழகமும் மக்களை போலி பிம்பச் சிறையில் சிக்க வைத்து சுயலாபம் அடைவதாக திமுக ஐடி விங் கடுமையாக சாடியுள்ளது.

ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜோசப் விஜயின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் நேற்று உலகமெங்கும் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனநாயகன் படத்தில் தற்போது தவெக அரசில் அமைச்சர்களாக உள்ள ஆனந்த், அருண்ராஜ், விஜய் பார்த்திபன், ஸ்ரீநாத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய படம் பல பிரச்னைகளை கடந்து வெளியாகியுள்ளது. அதற்குள் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்தித்து முதலமைச்சராகவும் மாறி விட்டார். இப்படியான நிலையில் ஜனநாயகன் பட வெளியீட்டால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் களைகட்டியது. தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அனைவரும் படத்தை முதல் காட்சியே பார்த்து ரசித்தனர்.

குறிப்பாக தவெக அரசின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் என அனைவரும் படம் பார்த்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இதில் அமைச்சர் பர்வேஸ் கடைசியின் விஜயின் சினிமா பயணத்தை நினைவுக்கூறும் வகையில் இடம்பெற்ற வீடியோவைக் கண்டு கண் கலங்கினார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள் ஆனந்த், விக்னேஷூம் படம் பார்த்து கண் கலங்கினர். இது ஒருபுறம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் ட்ரோலாகவும் மாறத் தொடங்கியது.

திமுக ஐடி விங் கடுமையான விமர்சனம்

இந்த நிலையில் ஜனநாயகன் பார்த்து அமைச்சர்கள் அழுத சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. அதுவும் இதில் அதிமுகவையும் சம்பந்தப்படுத்தி பேசியுள்ளது. அந்த பதிவில், “கொள்கையற்ற போலி பிம்ப அரசியல்.. நீட் அநீதிக்கும், மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கத் துப்பில்லாத இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்தக் கொள்கையோ, கோட்பாடோ கிடையாது.

Also Read: Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்.. ஜனநாயகன் பார்த்து கண்ணீருடன் வெளிவந்த ரசிகர்கள்!

அதிமுகதான் தவெகவுக்கு தாய் கட்சி, இரண்டிற்கும் எந்த வேறுபாடும் இல்லை என இவர்களே அப்பட்டமாக ஒப்புக்கொண்டபடி, இரு தரப்பும் மக்களை பிம்பச் சிறையில் சிக்க வைத்துத் தங்கள் சுயலாபத்தை அடையத் துடிக்கும் பிழைப்புவாதக் கூட்டங்கள் தான்” என கடுமையாக சாடியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் இதயக்கனி திரைப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்றார். அப்போது அமைச்சர்களுடன் இணைந்துஅந்த படத்தைப் பார்த்த அவர், எம்ஜிஆரைக் கண்டு கண் கலங்கியதாக வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article