பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்

பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
News Image

கஞ்சா பழக்கத்திற்கு அடிமை

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சற்குணத்தின் மகன் சஞ்சய் பிரவீன் ( வயது 21 ) இவர் 12 - ம் வகுப்பு வரை படித்து விட்டு கணினி பயிற்சி வகுப்புக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சில காலமாக மனநலப் பிரச்சினையாலும் அவதிப்பட்டு வந்ததாகவும் , கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக , அடிக்கடி கஞ்சா வாங்குவதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 11-ஆம் தேதி பெற்றோர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து , சஞ்சய் பிரவீன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால் , பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கிணற்றில் மிதந்த நிலையில் உடல்

இந்த நிலையில் , வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனபால் என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்திருந்த கிணற்றில் இளைஞரின் உடல் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் இளைஞரின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் , சஞ்சய் பிரவீன் உயிரிழப்பதற்கு முன்பு தனது கையில் கல்லை கட்டிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் உயிரிழப்புக்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காவல் துறை விசாரணைக்குப் பிறகே உறுதியாகத் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இளைஞரின் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் , அவரது உடல்நிலை , போதைப் பழக்கம் மற்றும் இதர காரணிகள் குறித்து பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், போதைப் பொருள் பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks