ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் காலம் வருமா?" - மதுரையில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி நூதன விழிப்புணர்வு செய்த வீ த லீடர்ஸ் அமைப்பு.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சந்திப்பில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் We The Leaders அமைப்பு சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, வெப்பநிலை உயர்வு, மரங்களின் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சவால்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், “சுற்றுச்சூழலை பாதுகாப்போம்… மரங்களை வளர்ப்போம்… வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான காற்றை வழங்குவோம்” என்ற உறுதிமொழியை ஏற்று கையெழுத்திட்டு தங்களது ஆதரவை பதிவு செய்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அந்த மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்ப்பதாகவும், இயற்கை வளங்களை பாதுகாப்பதாகவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதாகவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதாகவும் அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய அமைப்பின் நிர்வாகிகள், காற்றை பணம் கொடுத்து வாங்கும் நிலை எதிர்காலத்தில் உருவாகாமல் தடுக்க இன்றே ஒவ்வொருவரும் ஒரு மரமாவது நட்டு வளர்க்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பும் ஆகும். மரங்களை பாதுகாப்பதும், புதிய மரக்கன்றுகளை நடுவதும், இயற்கை வளங்களை காப்பதும் காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினர். ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்த நூதன நிகழ்ச்சி, அப்பகுதி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

Source: Read Full Article