திமுக அழிக்க நினைக்கிறீயோ? .. விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!

திமுக அழிக்க நினைக்கிறீயோ? .. விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!
News Image

தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டால் தான் புத்தி வரும் என்பதற்கு 2026 ஒரு உதாரணம் என திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தவெக வெற்றியை விமர்சித்துள்ளார்.

ராயபுரம் பகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திமுக தொடங்கி 75 ஆண்டுகாலம் ஆகும் நிலையில், இந்த காலக்கட்டத்தில் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் என்னென்ன திட்டங்கள் கொடுத்தோம். கடந்த 5 ஆண்டுகாலத்தில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் உங்களுக்கு என்னென்ன திட்டங்களை எல்லாம் அள்ளி வழங்கினார். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில் 21 மணி நேரம் உங்களுக்காகவே உழைத்து தன் வாழ்வை தேய்த்துக்கொண்ட தலைவர் அவர். அப்படி செய்துக் கொடுத்தும் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் தாய்மார்கள் உதயசூரியனுக்கு வாக்களித்திருக்கலாம்.

அப்படி செய்திருந்தால் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகி ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் உங்களுக்கு கிடைத்திருக்கும். பாவம், உங்களுக்கு அது கிடைக்கவில்லை. மீண்டும் திமுக ஆட்சி வந்திருந்தால் மாதம் ரூ.2 ஆயிரம் கிடைத்திருக்கும். 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டோம்.

இப்போது உள்ள தவெக அரசு நாங்கள் கூட பதவியேற்பு நாளில் 3 கோப்புகளில் கையெழுத்து போட்டோம் என சொல்வார்கள். 200 யூனிட் இலவசம் என அறிவித்தும் மின்சார வாரியத்திடம் கேட்டால் இன்னும் அமல்படுத்தவில்லை என சொல்கிறார்கள். இதனால் பல மடங்கு மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நிலைமை வரும் நான் அன்றைக்கே சொன்னேன்.

விஜய் இப்படியெல்லாம் செய்வார் ஏமாந்துடாதீங்கன்னு எவ்வளவு சொன்னேன். அடுத்ததாக சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் கொண்டு வந்தார்கள். நாங்கள் வைத்திருந்த 4 போலீஸை கூப்பிட்டு யூனிஃபார்ம் மாற்றி, அவர்கள் பயணிக்கும் வாகனத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி சீன் காட்டினால் அது அதிரடிப்படை திட்டமா?

நான் ஒரு 8 மாதமாக வெளியே இருக்கிறேன். என்னை சிறையில் போட்டால் புகழும் பெருமையும் கூடிக்கொண்டு தான் செல்கிறது. மு.க.ஸ்டாலின் கூட என் தோளின் மீது கை வைத்து திமுக இருக்கிறது, உன்னை காப்பாற்றும் என தெரிவித்தார். இதைவிட எனக்கு என்ன வேண்டும். 75 ஆண்டுகால கட்சியை சாப்பிட்டு விடலாம் என நினைப்பவர்களே, இந்த 75 ஆண்டுகால கட்சியை வழிநடத்த உதயநிதி இருக்கிறார்.

Also Read: GV Markandeyan: அன்று ஸ்டாலின் குடும்பம்.. இன்று விஜய்.. வாயை விட்டு வாங்கி கட்டும் MLA மார்க்கண்டேயன்!

தேர்தலில் மன்றாடி கேட்கிறேன், மடிப்பிச்சை என பல வகைகளில் வாக்கு கேட்டேன். இனி நான் அப்படி கேட்கப்போவதில்லை. கேட்டால் பதவி அரிப்பு என சொல்வீர்கள். தமிழ்நாடு பாழ்பட்டுப்போகிறதே என்ற கவலை திமுகவை தவிர இந்தியாவில் யாருக்கும் கிடையாது” என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பாக தவெகவையும், விஜயையும் சரமாரியாக விமர்சித்த இவர் சமீபகாலமாக பெரிய அளவில் வெளியே தலை காட்டவில்லை. ஆனால் திமுக தலைவர்கள் மீது தவெக அரசு தொடர்ச்சியாக கைது படலம் போன்றவற்றை மேற்கொள்வதால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் விஜயை விமர்சிக்க களமிறக்கப்பட்டிருக்கலாம் என்பது அரசியல் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks