" வாட்ஸ் அப்பில் இளம் பெண்கள் புகைப்படம் "

சென்னை எழும்பூர் தமிழ் சாலை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து அறை எடுத்து தங்கும் நபர்கள் , லாட்ஜில் அளிக்கும் செல்போன் நம்பரை வைத்து , அந்த நபர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்கள் புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொழில் செய்து வருவதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு புகார் வந்தது.

அந்த புகாரின் மீது விசாரணை நடத்த விபசார தடுப்பு பிரிவு - 1 இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு உதவி கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் குழுவினர் சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.

" 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் "

அப்போது லாட்ஜின் முதல் மாடியில் அறையில் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த புரோக்கர் டேவிட் ஜெயகுமார் ( வயது 39 ) என்பவர் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து டேவிட் ஜெயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட புரோக்கரை , போலீசார் சைதாப்பேட்டை 23 - வது நீதிமன்ற நீதிபதி பத்மகுமாரி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 2 பெண்களை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்

Source: Read Full Article