ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?

ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
News Image

ஜனநாயகனும் சிக்கல்களும்

தமிழகத்தில் திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே கடந்த 50 ஆண்டுகாலமாக ஆட்சி அமைத்து வந்த நிலையில், அந்த கட்சிகளுக்கு கடும் சவாலாக களத்தில் இறங்கினார் நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட விஜய், தான் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என அறிவித்தார். இதனையடுத்து அந்த படத்தின் படிப்பிடிப்பு முடிவடைந்து 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது வெளியிட திட்டமிடப்பட்டது. இதற்காக திரையரங்கம் முழுவதும் விழாக்களும் தயாரான நிலையில் கடைசி 3 தினங்களுக்கு முன்பாக படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கொடுப்பதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக படம் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டது.

7 மாதங்களுக்கு பிறகு வெளியான ஜனநாயகன்

அடுத்தாக சட்டமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், ஜனநாயகன் திரைப்படம் வெளியிட சிக்கல் உருவானது. இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்புள்ள நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே சுமார் 7 மாதங்கள் தாமதமாக முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியானது. திரையரங்கம் முழுவதும் விஜய் கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று காலை தமிழகம் முழுவதும் 9 மணி காட்சி தொடங்கிய நிலையில், பல ஊர்களில் அமைச்சர்கள் முதல் ஷோவில் படத்தை பார்த்து வருகிறார்கள்.

கண்ணீர் விட்ட அமைச்சர் பர்வேஷ்

அந்த வகையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் அமைச்சரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் படத்தை பார்த்தனர். இதே போல ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையனும் படத்தை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்று படம் வெளியான நிலையில் கடந்த 30 வருடமாக விஜய் நடித்த படங்களில் தொகுப்பானது ஜனநாயகன் படத்தின் தொடக்கத்தில் ஒளிபரப்பபட்டது. இதனை பார்த்த அமைச்சர் பர்வேஷ் கண்ணீர் விட்டு அழுதார். தனது தலைவனின் கடைசி படம் என்பதால் அடக்கமுடியாமல் விசும்பி, விசும்பி அமைச்சர் பர்வேஷ் அழுதார். இதனை பார்த்த திரையரங்கில் இருந்தவர்களும் சோகத்தில் மூழ்கினர்.

யார் இந்த பர்வேஷ்

தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் முகமது பர்வேஸ், இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பர்வேஷ்  அரசியலுக்கு வருவதற்கு முன்பாக விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் விஜய் ரசிகர் மன்றப் பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார் .விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில மற்றும் மாவட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்த பர்வேஷ் தற்போது அமைச்சராக உயர்ந்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks