தமிழகத்தில் தவெக ஆட்சி

தமிழகத்தில் சுமார் 50 வருடங்களுக்கு பிறகு திமுக- அதிமுக அல்லாத புதிய கட்சியானது ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், 2026 ஆம் ஆண்டு இரண்டு திராவிட கட்சிகளை வீழ்த்தி முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தலில் விஜய் என்ற ஒருவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களித்து 108 எம்எல்ஏக்களை வெற்றி பெற செய்துள்ளனர். தங்கள் தொகுதியில் யார் தவெக வேட்பாளர் என கூட பார்க்காமல் விஜய்க்கு என விசில் சின்னத்தில் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து அமைச்சர்களாகவோ, எம்எல்ஏக்களாகவோ பதவியேற்றுள்ள தவெகவினரின் தினந்தோறும் சர்ச்சையாகவும், திமிராகவும் பேசி வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரீல்ஸ் மோகத்தில் தவெகவினர்

அந்த வகையில் தவெக ஆட்சி அமைந்த அடுத்த நாளை மருத்துவமனை, ஓட்டல், கல்வி நிலையங்கள் என பல இடங்களில் தவெகவினரே நேரடியாக சென்று ஆய்வு செய்ய தொடங்கினார். இது மட்டுமில்லாமல் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்குள் சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்துல் வழங்கி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், இன்னும் ரீல்ஸ் மோகம் தவெகவினரிடம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இந்த நிலையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் பாலாஜி அடுத்தடுத்து தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

அமைச்சர் விஜய் பாலாஜியின் சர்ச்சை பேச்சு

அந்த வகையில் கடந்த மாதம் அமைச்சர் விஜய் பாலாஜி, நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக காரில் சென்ற திமுக எம்பி கதிர் ஆனந்தை நோக்கி "தம்பி அப்படியே வாங்க" என்று அழைத்தார். தொடர்ந்து பேசிய அவர், அங்கு கூடியிருந்த மக்களிடம், "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது... அங்கே எதுவும் பெரிய சம்பவம் நடக்கலை, உட்காருங்க" என்று கூறினார். திமுக சார்பாக இரண்டு முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட ஒருவரை அவமதிக்கும் வகையில் பேசிய பேச்சால் அப்போதே சமூக வலைதளத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி திமிராகப் பேசுவதாக விமர்சிக்கப்பட்டார்.

மக்கள் செய்த ஊழல்- விஜய் பாலாஜி

அடுத்தாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் விஜய் பாலாஜி,அரசியல்வாதிகள் ஊழல் செய்வதை கடந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களை அரியணையில் அமர்த்தியதன் மூலம் மக்களாகிய நீங்கள்தான் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளீர்கள் என்று பொருள் தொடும்படி பேசினார். குறிப்பாக வேறு கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தவெகவிற்கு வாக்களித்ததை குறித்தும் பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

" சீமான்னா யாருணா ?"- விஜய் பாலாஜி

இந்த நிலையில், " சீமான்னா யாருணா ?" என்று அலட்சியமாகப் அமைச்சர் விஜய் பாலாஜி பதில் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், அமைச்சர் விஜய் பாலாஜி சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அபோது செய்தியாளர்கள் அமைச்சரிடம் சேலத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கும் விவகாரமாகும் தொடர்பாக சீமான் கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி, கேள்வியைக் கேட்டவுடன் "சீமான்னா யாருணா?" என்று செய்தியாளரைப் பார்த்தே பதில் கேள்வி கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு எம்பி, எம்எல்ஏ கேள்வி எழுப்பியிருந்தால் பதில் அளிக்கலாம்.

ஆனால் எந்த ஒரு மக்கள் பிரதிநிதித்துவப் பொறுப்பிலும் இல்லாத, ஒருமுறை கூட ஜெயிக்காத சீமான் யார்? அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அமைச்சர் விஜய் பாலாஜி பேசியது அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளத்தில் அமைச்சரின் பேச்சுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், சீமான் பல ஆண்டுகாலமாக மக்களுக்கான போராடி வருகிறார். ஒரு போராட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் விஜய் என்ற ஒரு நபரின் மூலம் வெற்றி பெற்று விட்டு தற்போது அமைச்சர் விஜய் பாலாஜி ஆணவத்தில் பேசிவருவதாக விளாசி வருகிறார்கள்.

Source: Read Full Article