" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்

" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
News Image

" உன்னால் தான் என் மனைவி பிரிந்து சென்றாள் நீ மட்டும் சந்தோஷமா வாழ்கிறாயா "

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண். இவருக்கு 11 வயது மற்றும் 5 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர், முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். 2011 - ம் ஆண்டு விநாயகபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்த போது பத்மநாபன் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், அந்த பெண் பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், பத்மநாபன் மீண்டும் அந்த பெண்ணிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டும் அவர் வேலை செய்யும் அலுவலகத்துக்கு நேரில் சென்றும் தன்னுடன் சேர்ந்து வாழும்படி தொல்லை கொடுத்துள்ளார். ''உன்னால் தான் என் மனைவி பிரிந்து சென்று விட்டார் நீ மட்டும் உனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்கிறாயா '' என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

" உனது மனைவி என்னுடன் தான் இருந்தாள் என் கூட அனுப்பி விடு "

பத்ம நாபன் அந்த பெண்ணின் வீட்டுக்கே நேராக சென்று அவரது கணவரிடம் , ''உனது மனைவி என்னுடன் தான் இருந்தார். அவரை என்னுடன் அனுப்பிவிடு '' என்று கூச்சல் போட்டுள்ளார். இதனால் கடும் வேதனை மற்றும் அவமானம் அடைந்த பெண் , வீட்டில் இருந்த எலி பவுடர் , எரும்பு பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு மயக்கம் அடைந்தார்.

உடனே அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்து ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து அந்த பெண்ணின் புகாரின் படி, ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து திரு.வி.க நகர் கே.சி.கார்டன் 3 - வது தெருவை சேர்ந்த பத்மநாபனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks