திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன சிறுவர், சிறுமியர்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பள்ளியில் சேர்த்த சம்பவம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

திமுக ஆட்சியில் நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் 140க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2024ம் ஆண்டு இந்த குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் கல்வி கற்க செல்லாமல் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தது தொடர்பாக மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி நரிக்குறவர் இன குடும்பங்களிடம் பேசி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் மிகுந்த பாராட்டைப் பெற்றிருந்தது.

<iframe title="TVK MLA Saravanan |”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்" src="https://www.youtube.com/embed/ynL3NKvNqbI" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

பள்ளியில் ஒதுக்கப்பட்ட குழந்தைகள்

ஆனால் 2026-2027ம் கல்வியாண்டு தொடங்கிய நிலையில் தற்போது 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் பள்ளிச் செல்லாமல் வீட்டில் இருப்பது தொடர்பாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களிடம் பேசினர்.

Also Read: Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!

பின்னர் குழந்தைகளை அங்கிருந்த அரசுப்பள்ளியில் சேர்த்தனர். ஆனால் வந்திருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் சிறுவர், சிறுமியர்களின் பெற்றோர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். எங்கள் குழந்தைகளை நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என கூறி பள்ளி வகுப்பறையில் அமர விட மறுக்கிறார்கள். மரத்தடியிலும், படிக்கட்டிலும் உட்கார சொல்கிறார்கள். நீங்கள் வந்து பள்ளியில் கேளுங்க என குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களின் மனது பாதித்துள்ளது.

எங்கள் குழந்தைகளை தனியாக உட்கார வைப்பதால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. இதுதொடர்பாக கேட்டால் அங்கிருக்கும் ஆசிரியர்கள் அப்படித்தான் வைப்போம் என கூறுகிறார்கள். எங்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எங்களைப் பார்த்தாலே விலகி செல்கிறார்கள். மூக்கை துணியைக் கொண்டு மூடுகிறார்கள். நாங்கள் என்ன இளக்காரமாக போய் விட்டோமா?.. இப்போதெல்லாம் நாங்கள் தமிழ் சரியாக பேசுகிறோம். எங்கு போனாலும் நாகரிகமாக தான் இருக்கிறோம்.

எனினும் எங்கு சென்றாலும் ஒதுக்கப்படுகிறோம். எங்களுக்கென வீடு கிடையாது. பட்டா கிடையாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படியே இருக்கிறது. இந்த இடத்திற்கு வந்து 26 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் ஏரியாவில் கொட்டப்படும் குப்பைகளை அள்ளக்கூட 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறார்கள். எங்கள் மக்களுக்கு எப்போது தான் விமோசனம் கிடைக்குமோ? என வருத்தத்தை தெரிவித்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

Source: Read Full Article