நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.. நாங்க மாணவர்கள் பக்கம் தான்.. மத்திய அரசை சாடிய ஆதவ் அர்ஜூனா!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.. நாங்க மாணவர்கள் பக்கம் தான்.. மத்திய அரசை சாடிய ஆதவ் அர்ஜூனா!
News Image

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம் என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

கலவரப்பூமியாக மாறிய டெல்லி

நீட் தேர்வில் தொடர்ச்சியாக முறைகேடு நிகழ்ந்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடங்கிய தீவிர போராட்டம், நாடாளுமன்றம் முற்றுகையிடும் பேரணியாக மாறியது. இந்த நிகழ்வின்போது வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இரண்டு நாட்களாக இந்த பிரச்னை டெல்லியில் பற்றி எரியும் நிலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பலரும் போராட்டம் நடத்தினர். போலீசார் அவரைப் பலமுறை கலைந்துபோகக் கோரியும் மறுத்ததால் ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு என்றும் துணை நிற்போம்

அந்த வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டப் பதிவில், “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! நீட் தேர்வு என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது. தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Also Read: DMK TVK: எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?

தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல்.

மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks