முதியவரை பராமரிக்கும் பணி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்பனேரி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மனைவி 33 வயதுடைய மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முனீஸ்வரி கணவரை பிரிந்து இராமநாதபுரம் மாவட்டம் தோழூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் தனியாக வசித்து வந்ததுடன், கட்டிட கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில், முனீஸ்வரியின் வீட்டின் அருகே வசித்து வந்த அனிதா என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு பகுதியில் முதியவரை பராமரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், நல்ல சம்பளம் வழங்கப்படும் என்றும் அனிதா கூறியதாக தெரிகிறது.

மிரட்டி பாலியல் வன்கொடுமை

இதையடுத்து, அனிதா கொடுத்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட முனீஸ்வரி, வேலைக்காக மேலூர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, தொலைபேசியில் பேசிய தாமரைப்பட்டியை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கோபாலகிருஷ்ணன், முனீஸ்வரியை தனது இருசக்கர வாகனத்தில் வேலை நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி , மேலூர் அருகே உள்ள ஆள் நடமாட்டம் குறைவான பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு ஏற்கனவே கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான தாமரைப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார் (33), வினித் (21), அரவிந்த் (26), மற்றும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வீரபாண்டி (30) ஆகியோர் காத்திருந்திருக்கின்றனர். பின்னர் அவர்களிடம் முனீஸ்வரியை விட்டு விட்டு கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து அங்கிருந்த நபர்கள் முனீஸ்வரியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன், அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முனீஸ்வரி, அங்கிருந்து தப்பித்து அருகிலிருந்த மதுபானக் கடை பகுதியில் இருந்தவர்களிடம் நடந்தவற்றை கூறி உதவி கோரியுள்ளார். பின்னர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று முனீஸ்வரி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலையரசி மற்றும் ஆய்வாளர் ஜெயப்பிரதா தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, செல்வக்குமார், வீரபாண்டி, அரவிந்த் , வினித் , மற்றும் அவர்களுக்கு உதவியதாக கூறப்படும் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: Read Full Article