மேகதாது அணை விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணிக்கும், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூருக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வருகிறது.

மேகதாது அணை விவகாரம்

கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பதில் உறுதியாக உள்ள நிலையில் தமிழ்நாடு அரசும், இங்கிருக்கும் அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் தமிழ்நாடு உரிமைகள் விட்டு போய்விடக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளது. இதனிடையே கர்நாடகா முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமாரை ஆகஸ்ட் 3ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று சந்தித்து மேகதாது அணை, காவிரி நீர் விவகாரம் குறித்து பேசவுள்ளார்.

அன்புமணி - மாணிக்கம் தாகூர் மோதல்

இதனிடையே சில தினங்கள் முன்பு அன்புமணி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாடு வரவுள்ள நிலையில் இங்கு மேகதாது விவகாரம் குறித்து பேச தயாரா எனவும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகவும் தெரிவித்தார். இதற்கு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பதை மோடியிடம் அன்புமணி கூற வேண்டும். அதேசமயம் பாஜக கூட்டணியில் நீடிக்கும் பாமகவின் மாநிலங்களவை எம்பி ஆதரவை அன்புமணி விலக்கிக்கொள்வாரா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாங்க எல்லாம் ஜெயிலைப் பார்த்தவங்க

இதனிடையே பாமக தலைவராக மீண்டும் அன்புமணி ராமதாஸ் நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி மாணிக்கம் தாகூர் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரவிடாமல் சதி திட்டம் திட்டி வருகிறார்கள். இது சம்பந்தமாக தான் நான் அறிக்கை வெளியிட்டேன். உடனே இங்கே தமிழ்நாட்டில் புதிதாக வந்திருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு ஆவேசமாகிறார்.

நாங்கள் துப்பாக்கிச்சூட்டை பார்த்து விட்டோம். தடியடியை பார்த்து விட்டோம். ஜெயில் எல்லாத்தையும் கூட பார்த்து விட்டோம். நீங்கள் அப்போது பிறந்து கூட இருக்க மாட்டீர்கள். அமைதியாக போய்க்கொண்டிருக்கிறோம். பாமக தனியாக நின்று எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெற முடியாது என அன்புமணி தெரிவித்தார்.

Also Read: TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

பயப்படுறீங்களா.. பாமகவே தொங்கிட்டு இருக்குது

அன்புமணியின் பேச்சைக் கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. நான் ஒன்று மட்டும் தான் கேட்டேன். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிமையில்லை என மத்திய அமைச்சர் சொன்னதை கண்டித்து எம்பி பதவியை ராஜினாமா செய்வீர்களா என்று தானே கேட்டேன். ஏன் உங்களுக்கு இவ்வளவு பதற்றம்?.. சிபிஐ வழக்கு இருப்பதாலா?.. இதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா?.. பாமகவே அதிமுக, பாஜகவிடம் தொங்கிட்டு அரசியல் செய்துக்கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. பல மாநிலங்களில் ஆள்கிறோம். அதனால் உங்கள் கட்சியை முதலில் பாருங்கள். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Source: Read Full Article