Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்

Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
News Image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சமீபத்திய மோதல்களைத் தொடர்ந்து, ஈரான் தனது ராஜதந்திர அணுகுமுறையையும், உள்நாட்டு ஒற்றுமையையும் உலகிற்கு வெளிப்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் சையத் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், இந்தியா உட்பட கிட்டத்தட்ட 100 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதையும், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றதையும், தனது வலிமையையும் உலகளாவிய ஆதரவையும் வெளிப்படுத்தும் ஒரு செயலாக டெஹ்ரான் பறைசாற்றுகிறது.

7 நாள் இறுதி ஊர்வலம் டெஹ்ரானில் தொடங்கியது

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்த அலி கமேனியின் உடல், ஜூலை 3-ம் தேதி முதன்முறையாக பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்டது. இது அவரது 7 நாள் இறுதி ஊர்வலத்தின் தொடக்கத்தைக் குறித்தது. இந்த ஊர்வலம், ஈரான் மற்றும் ஈராக்கில் உள்ள ஐந்து நகரங்கள் வழியாக, சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து, ஈரானின் மஷ்ஹத் நகரில் நிறைவடையும். அங்கு அவர் நல்லடக்கம் செய்யப்படுவார்.

இந்தியா உட்பட 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், கிட்டத்தட்ட இந்தியா உள்ளிட்ட 100 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இந்திய தரப்பில், பீகார் ஆளுநர் (ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல்) சையத் அதா ஹஸ்னைன் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிதா ஆகியோர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்துள்ளனர்.

பாலஸ்தீன், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஈராக், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பல்கேரியா மற்றும் குர்திஸ்தான் பிராந்தியம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் டெஹ்ரானுக்கு வந்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் ஹே வெய் மற்றும் வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமது ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்

மறைந்த ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று டெஹ்ரான் கூறுகிறது. இதற்கிடையே, கோம் நகரின் வெள்ளிக்கிழமை தொழுகை இமாம் அயதுல்லா முகமது சயீதி, இந்த இறுதிச் சடங்கு ஈரானுக்கு "மற்றொரு பொது வாக்கெடுப்பாக" இருக்கும் என்றும், இது உலகிற்கு தேசிய ஒற்றுமையின் செய்தியை அனுப்பும் என்றும் கூறினார்.

போருக்குப் பிறகான ஒற்றுமையின் பறைசாற்றல்

இறுதி ஊர்வலத்தில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள், சமீபத்திய போருக்குப் பிறகும் தங்கள் தலைமைக்கும், அரசாங்கத்திற்கும் உறுதியாக விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது என ஈரானிய அதிகாரிகளும், ஆதரவாளர்களும் கூறுகின்றனர். தெருக்களில் நடைபெறும் இந்த கூட்டங்களை, வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தேசிய ஒற்றுமையின் சின்னமாகவும் ஈரான் முன்வைக்கிறது.

அலி கமேனிக்கு நடந்தது என்ன.?

ஈரானின் கூற்றுப்படி, பிப்ரவரி 28 அன்று நடந்த அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில், அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக அவரது இறுதிச் சடங்கு உடனடியாக நடத்தப்படவில்லை. மேலும், இறுதி ஊர்வலம் இப்போது நான்கு மாதங்களுக்குப் பிறகு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks