Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?

Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
News Image

தமிழ்நாடு அரசியல் களம் இதற்கு முன்னர் நடக்காத பல திருப்பங்களை கண்டுகொண்டிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திமுக – அதிமுக என்ற திராவிட இயக்கங்கள் ஆண்டுகொண்டிருந்த தமிழ்நாட்டை, முதல் தேர்தலிலேயே புரட்டிப் போட்டு.ஆட்சி கட்டிலில் முதல்வராக அமர்ந்திருக்கிறார் விஜய். இதனையடுத்து, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, குதிரை பேரம் என அரசியல் களம் அடுத்தடுத்து அதிர்ச்சிகளை அள்ளித் தந்துகொண்டிருக்கிறது.

ஆட்சியை  பிடித்து விஜய் முதலமைச்சராகவே ஆகியிருப்பதால் பல திரைபிரபலங்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் யோசனையை இப்போதே தொடங்கியிருக்கின்றார்கள். குறிப்பாக, நடிகர் சூர்யா அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருகிறார் என்ற செய்தி வெளியானபோது அதை அதிகாரப்பூர்வமாக மறுத்தார். ஆனால், அதிகாரப்பூர்வமற்ற வகையில் அதற்கான முன்னெடுப்புகள் இப்போதும் தனது ரசிகர் மன்றம் மூலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

புதிய கட்சியை தொடங்கும் நடிகர் தனுஷ் ?

இந்நிலையில், தன்னுடைய முன்னாள் மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் விட்ட இடத்தை பிடிப்பதற்கும், அந்த இடத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்குவதற்கும் நடிகர் தனுஷ் திட்டமிட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ரஜினி மகளுக்கும் தனுஷ்க்கும் இடையே அதிகாரப்பூர்வமாக பிரிவு ஏற்பட்டிருந்தாலும் அரசியல் ரீதியாக தனுஷ்க்கு ஆதரவு அளிக்க ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

2021ல் அரசியல் கட்சியை தொடங்கி, ரஜினிகாந்த் தேர்தலை சந்தித்திருந்தால் ஆட்சியை பிடித்திருப்பார் என்ற எண்ணம் விஜய் முதல்வரான பின்னர் அவரது குடும்பத்தில் உருவாகி அது பெரும் மனகவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதை ரஜினியும் விஜய் குறித்த செய்தியாளர் சந்திப்பில் ஓபனாக பேசினார். அதனால்தான், ரஜினிகாந்தின் மனைவி லதா புதிய இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். ஆனால், விஜய் போன்ற மக்கள் செல்வாக்கு கொண்ட மாபெரும் ஸ்டாருக்கு இணையாக இன்னொருவரை தங்கள் குடும்பத்தில் இருந்து களத்தில் இறக்கிவிட ரஜினி குடும்பத்தினர் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் தன்னுடைய முன்னாள் மருமகனும் பெரும் ரசிக பட்டாளத்தை வைத்திருப்பவருமான தனுஷை களத்தில் இறக்கலாம் என்ற திட்டத்திற்கு அவர்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் விஜயை சந்திக்காத தனுஷ்

முதலமைச்சரான விஜயை சிவகார்த்திகேயன், அதர்வா, அர்ஜூன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் அவரை சந்திக்காதற்கு காரணமும் இதுதான் என்று பேசப்படுகிறது.

தனுஷ் முடிவு என்ன ?

அதே நேரத்தில், தமிழ் திரையுலகில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு, அரசியலுக்கு வரும் நேரத்தில் அதில் இருந்து பின்வாங்கிய ரஜினியின் இடத்தை பிடிக்க தனுஷ்க்கும் விருப்பம் இருப்பதாகவும், ரஜினியின் வெளிப்படையான ஆதரவு இருக்கும்பட்சத்தில் தன்னுடைய அரசியல் பயணம் பிரச்னையில்லாமல் இருக்கும் என்றும் தனுஷ் நினைப்பதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தன்னுடைய ரசிகர் மன்றங்களை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தனுஷ் முடுக்கிவிட்டிருப்பதாகவும், வரும் உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை போட்டியிட வைத்து நேரடி அரசியலில் இறங்குவதற்கான சோதனையோட்டத்தை நடத்தும் திட்டமும் தனுஷிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

நடிகராக இருந்த விஜய் ஆட்சியையும் பிடித்து முதலமைச்சராகவும் ஆகிவிட்ட நிலையில், தனுஷ்ம் அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்ற நினைப்பில் இந்த தகவல் கசிந்ததில் இருந்து தனுஷின் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தும் தனுஷ்

நடிகர் ராகவா லாரன்ஸ், விஷால் உள்ளிட்டோரெல்லாம் நேரடி அரசியலுக்கு வரும் மெனக்கெடுப்பில் இருக்கும் நிலையில், விஜயை போலவே ரசிகர் மன்ற கட்டமைப்பை வைத்திருக்கும் தனுஷ், அதில் முந்திகொள்ளவும் ரஜினியின் ரசிகர்களையும் தன் பக்கம் இழுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தனுஷ் மறுக்கலாம்

’அரசியலுக்கு வர எண்ணமில்லை’ என்று கூட இந்த செய்தி வெளியான பிறகு நடிகர் தனுஷ் தரப்பு மறுக்கலாம். ஆனால், மறுப்பது நாளடைவில் நடப்பதும், நடந்ததை காலப்போக்கில் மறுப்பதும் ஒன்றும் தமிழக அரசியலுக்கு புதிததல்ல.  நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனுஷ் கட்சி தொடங்குவது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும்..! அவ்வளவுதான்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks