AAVIN Ghee Price : நெய் விலை லிட்டருக்கு ரூ.37 உயர்வா.? ஷாக் கொடுத்ததா விஜய் அரசு- ஆவின் பரபரப்பு விளக்கம்

AAVIN Ghee Price : நெய் விலை லிட்டருக்கு ரூ.37 உயர்வா.? ஷாக் கொடுத்ததா விஜய் அரசு- ஆவின் பரபரப்பு விளக்கம்
News Image

ஆவின் பால் கொள்முதல்

தமிழக அரசு சார்பாக ஆவின் மூலம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களானது விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகமான விவசாயிகள் பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் சுமார் 37 லட்சம் லிட்டர் பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. தனியார் நிறுவனங்கள் 2 கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில்  ஆவின் நிர்வாகம் பால் மட்டுமில்லாமல் பால் சார்ந்த உப பொருட்களான நெய், வெண்ணெய், இனிப்பு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.

ஆவின் நெய் விலை உயர்வு

இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் நெய் விலையை உயர்த்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த 15 ஆம் தேதி முதல் ஆவின் நெய் லிட்டருக்கு 37 ரூபாய் உயர்த்தி 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆவின் நெய் விலையை உயர்த்தவில்லையென ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த வகையில், எந்த ஒரு நெய் வகையின் விலையிலும் உயர்வு செய்யப்படவில்லையெனவும், மொத்த விற்பனையாளர் லாப வரம்பில் செய்யப்பட்ட திருத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஆவின் நெய் விலையை உயர்த்தவில்லை

ஆவின் நிறுவனம் நெய்யின் மொத்த விற்பனையாளர் (WSD) லாப வரம்பைக் குறைத்து, அதன் சில்லறை விலையை உயர்த்தியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம், அனைத்து வகையான நெய்களையும் தற்போதைய சில்லறை விலையிலேயே நுகர்வோருக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறது. எந்தவொரு நெய் வகையின் விலையிலும் எந்த உயர்வும் செய்யப்படவில்லை. மேலும், மொத்த விற்பனையாளர் (WSD) லாப வரம்பில் செய்யப்பட்ட திருத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது, முந்தைய லாப வரம்புக் கட்டமைப்பு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks