" வேலையில் உருவான கள்ளத் தொடர்பு "

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருக்கம்பட்டு ஊராட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 30 ) இவர் கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். திருத்தணியை சேர்ந்த சரிதா என்ற பெண் ராமச்சந்திரனிடம் கட்டிட வேலை செய்யும் சித்தாளாக பணிபுரிந்து வந்துள்ளார். முதலில் வேலை காரணமாக பழக தொடங்கி உள்ளார்கள். நாளைடைவில் நெருக்கமாக மாறிய பழக்கத்தால் இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.

சரிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 14 வயது மகள் இருக்கிறாள். அந்த சிறுமி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இந்நிலையில் ராமச்சந்திரனுடன் கள்ளத் தொடர்பில் உள்ள தாய் சரிதா தனது 14 வயது மகளை அவருக்கு திருமணம் செய்ய வைக்க முயற்சி செய்துள்ளார். இதில் வயது ஒரு தடையாக இருந்ததால் சட்ட பிரச்சனை வரும் என்பதால் தற்போது திருமணத்தை தள்ளி போட்டுள்ளனர்.

" சிறுமிக்கு பாலியல் தொல்லை "

இதற்கிடையில் கட்டிட மேஸ்திரி ராமச்சந்திரன் சரிதாவின் வீட்டிற்கு அடிக்கடி வரும் வழக்கத்தை வைத்துள்ளார். மேலும் 14 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை பலமுறை தனது தாய் சரிதாவிடம் கூறியும் அதை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான 14 வயது சிறுமி பள்ளியில் தனியாகவும் , படிப்பில் நாட்டமில்லாமலும் இருந்துள்ளார். மேலும் எப்போதும் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் திருத்தணி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

காவல் துறை நடத்திய விசாரணையில் மாணவி அளித்த புகார் உண்மை என்று தெரிய வந்ததால் குற்றச் சாட்டப்பட்ட கட்டிட மேஸ்திரி ராமச்சந்திரன் மற்றும் சிறுமியின் தாய் சரிதா ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் திருத்தணி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ராமச்சந்திரன் -சரிதா ஆகியோர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியிடம் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் இருவரையும் அடைத்துள்ளனர்

Source: Read Full Article